மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

புதுச்சேரியில் உண்மை அறியும் குழு மீது தாக்குதல்: மே 10-ல் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 02.05.2012 அன்று மாலை 6 மணியளவில், புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி, அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தி.சஞ்சீவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் லூ.கஸ்பர், பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், மனித நேயம் அமைப்பு நிறுவனர் கோ.லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை பொறுப்பாளர் கு.மோகனசுந்தரம், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன், உறுப்பினர் ஜே.விக்னேஷ்குமார், தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, கிராமப்புற அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பெ.சந்திரசேகரன், அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அபுபக்கர், ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் இரா.சுகுமாரன், நுகர்வோர் குரல் பொறுப்பாளர் கு.கலைப்புலி சங்கர், செந்தமிழர் இயக்க உறுப்பினர் தி.அமிர்தலிங்கம், கிராமப்புற முற்போக்கு இளைஞர் கூட்டமைப்பு தலைவர் பெ.சரவணன், அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கப் பொதுச்செயலாளர் பா.சரவணன், அவதாரங்கள் கலைக் குழுத் தலைவர் செ.பெ.அருணகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் மார்கண்டன், தம்பு.சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கடலூர் பாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உறுவையாறில் சக்திவேல் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக கூறப்படும் சமபவம் குறித்து விசாரிக்க சென்ற உண்மை அறியும் குழுவினர் மீது போலீசார் தூண்டுதலின் பேரில் நடந்த தாக்குதலையும், மனித உரிமை ஆர்வலர்களின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் காவல்துறை, புதுச்சேரி அரசின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை, அரசின் இந்தப் போக்கை கண்டித்து வரும் மே 10 வியாழக்கிழமை, காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2. உறுவையாறில் சக்திவேலை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக கூறப்படும் சமபவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

3. உண்மை அறியும் குழு மீது நடந்த தாக்குதல் குறித்து மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் இத்தாக்குதலுக்கு காரணமானவரிடம் ஒரு புகாரை பெற்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

4. கரிக்கலாம்பாக்கம், பெருங்கலூரை சேர்ந்த ஜெகதீசன் தவறுதலாக குண்டு வீசிக் கொல்லப்பட்டதற்கு அரசே முழுப் பொறுப்பு என்பதால் அக்குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும், குண்டு வீச்சில் காயம்பட்டவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டும்.

5. புதுச்சேரியில் அண்மைக் காலமாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதற்கு பெரும்பான்மையான போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளோடு நெருக்கமாக கைகோர்த்து உறவு வைத்துள்ளதே காரணம். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

6. உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நடந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை
புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் 01.05.2012 அன்று மதியம் 12 மணிக்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ ஆறுமுகம் என்கிற இளைஞனை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற காவலர்கள் குழு ஒன்று துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான வாணரப்பேட்டை வினோத், முதலியார்பேட்டை பீட்டர், நித்தியானந்தம் ஆகியோர் கரிக்கலாம்பாக்கம் – பெருங்கலூர் சாலையில் வந்து கொண்டிருந்த அவ்வூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரை நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிக் கொன்றுள்ளனர். ஜெகதீசனுடன் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் துரைசாமி குண்டு வீச்சில் காயமடைந்தார்.

இதில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவெனில் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளியான ஜெகதீசனுக்கும் கொன்ற கும்பலுக்கும் பகை ஏதுமில்லை, இந்த ரவுடிக் கும்பலுக்கும் இவர்களுடனிருந்து பிரிந்த தேவதாஸ் என்பவரின் கும்பலுக்கும் பகை இருந்துள்ளது. தொடர்ந்து இவர்களுக்குள் மோதல்கள் நடந்துள்ளன. தேவதாசைக் கொல்லச் சென்றவர்கள் தவறுதலாக தேவதாஸ் என நினைத்து இரு குழந்தைகளுக்குத் தந்தையான அப்பாவி ஜெகதீசனைக் கொன்றுள்ளனர்.

வழக்கை காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி மேற்பார்வையில் ஆய்வாளர் பாஸ்கரன் விசாரித்து வந்தார். காவல் துறையின் கூற்றுப்படி வினோத், பீட்டர் முதலானோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்து சக்திவேல் பற்றி அறிந்து அவரைத் தேடி வந்தனர். 24 இரவு அவரைத் தேடிச்சென்று உறுவையாறு ஆற்று கல்வெர்ட் அருகில் முட்புதர் ஒன்றில் அவரைக் கண்டனர். கைது செய்ய முனைந்தபோது சக்திவேல் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியதில் அவர்கள் சென்ற பொலேரோ ஜீப் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஃபெலிக்ஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இரண்டாவது குண்டை சக்திவேல் வீச முற்படுகையில் பாஸ்கரன் சுட்டதில் சக்திவேல் படுகாயமடைந்து பிடிபட்டார்.

சக்திவேலுக்குக் கால்களில் மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளன. முழங்கால்கள் உடைந்து மருத்துவமனையில் உள்ளார்.

போலீசாரின் இந்தக் கதைக்கும் பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்திக்குமுள்ள ஒரு முரண்பாடு எங்களின் கவனத்திற்கு வந்தது. வினோத், பீட்டர் ஆகியோரோடு சக்திவேலையும் சம்பவம் நடப்பதற்கு முன்பே போலீஸ் கைது செய்து வைத்துள்ளதாகவும் நித்தியானந்தம் என்பவரை மட்டுமே தேடி வந்ததாகவும் தினத்தந்தி இதழில் செய்தி வந்துள்ளது. கைது செய்து வைத்துள்ள ஒருவரை ‘என்கவுன்டர்’ செய்யப்போவதாகப் புதுச்சேரி நகரத்தில் 23ந் தேதி மாலையே பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இப்படியான ஒரு துப்பாக்கிச்சூடு குறித்துப் பல அய்யங்கள் எங்களுக்கு ஏற்பட்டன. கொள்ளையர், ரவுடிகள் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்துத் தண்டனை வழங்காமல் துப்பாக்கியால் சுட்டுச் சாகசங்கள் புரிவதும் வீரப்பரிசுகள் பெறுவதும் ஒரு கலாச்சாரமாகவே ஆகிப் போன இன்றைய சூழலில் இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம்.

1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி

3. பி.வி. ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்

4. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்

5. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்

6. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

இக்குழு நேற்று முழுவதும் புதுச்சேரி, வில்லியனூர், உறுவையாறு கரிக்கலாம்பாக்கம் முதலான பகுதிகளுக்குச் சென்று சக்திவேலின் தாயார் வசந்தா (50), சித்தப்பா கிருஷ்ணன், அண்ணன் சத்தியன், கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூரைச் சேர்ந்த கொல்லப்பட்ட ஜெகதீசனின் மனைவி பேபி அவரது குழந்தைகள் மர்றும் உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்தது. பின்னர் காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி, குண்டு வீச்சில் காயம்பட்டதாகச் சொல்லப்படும் உதவி ஆய்வாளர் ஃபெலிக்ஸ் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசியது. குண்டு வீச்சும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவ இடத்தையும் சென்று பார்வையிட்டது. துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் பாஸ்கரனுடன் தொலைபேசியில் அய்யங்களைக் கேட்டுக் கொண்டது.

எமது பார்வைகளும் அய்யங்களும்

1. இரு ரவுடிக் குழுக்கள் இப்பகுதியில் உலவி வந்துள்ளன. இவர்களுக்குள் கடந்த இரு வாரங்களாகவே சண்டைகள் நடந்து வந்துள்ளன. கொலை நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாக தேவதாஸ் கும்பல் சக்திவேலைக் கத்தியால் கீறியுள்ளது. சக்திவேல் உள்ளிட்ட கும்பல் தேவதாசைக் கொல்லத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அதில் அப்பாவிக் கூலித் தொழிலாளி ஜெகதீசன் கொல்லப்பட்டது உண்மை. இதைச் சக்திவேல் குடும்பமே ஒத்துக் கொள்கிறது.

2. சக்திவேல் ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கித் தண்டனை அனுபவித்தவர். மேலும் இரு வழக்குகளும் அவர் மீது உள்ளன. வெடிகுண்டு செய்கிற அளவுக்குத் தேர்ந்த இரு குழுக்கள் இப்பகுதியில் உலவி வருவதை போலீசார் இதுவரை கண்டுகொள்ளாதது வருந்தத்தக்கது.

3. நாங்கள் விசாரித்த வகையில் ஜெகதீசன் கொலை செய்யப்பட்ட அடுத்தடுத்த நாளில் போலீசுக்கு ஆதரவான ஒரு வழக்குரைஞர் மூலமாக சக்திவேல் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். சக்திவேலுவின் தாய், சகோதரர், சித்தப்பா முதலியோர் இதை உறுதி செய்கின்றனர்.

4. சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்திற்குச் சென்று நாங்கள் நுணுக்கமாகத் தேடிப் பார்த்தோம். குண்டு வெடிப்பு முதலானவற்றிற்கு எந்த ஆதாரமும் அங்கில்லை. பகுதி மக்களும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை என்கின்றனர்.

5. குண்டு வெடிப்பில் ‘சேதம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் போலீஸ் வாகனத்தைப் பார்த்தோம். அதில் எந்தப் பாதிப்பும் இல்லை. குண்டு வீச்சால் ‘படுகாயம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் ஆய்வாளர்கள் ஃபெலிக்ஸ் ,மற்றும் முத்துக்குமார் இருவரும் இன்று வேலைக்குத் திரும்பிப் பணியில் உள்ளனர். ஃபெலிக்சுடன் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது உடம்பில் குண்டுக் காயம் பட்டதற்கான தடயம் ஏதுமில்லை. கார் பம்பரில் குண்டு பட்டுத் தெறித்தது என்கின்றனர். பிறகு உள்ளே இருந்த அதிகாரிகள் படுகாயமடைந்தனர் என்கின்றனர். இவை முரணாக உள்ளன.

6. முதல் குண்டு வீசி அது வெடித்துக் காயமேற்படுத்தியபின் இரண்டாவது குண்டை வீச முற்பட்டபோதுதான் துப்பாக்கியால் சுட்டோம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படியானால் அந்த இரண்டாவது குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்து பாதுகாக்கப்படுகிறதா எனக் கேட்டவுடன் அதுவரைக்கும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் பாஸ்கரன் இதையெல்லாம் நான் உங்களிடத்தில் சொல்லத் தேவையில்லை எனக் கூறி முடித்துக் கொண்டார். கண்காணிப்பாளர் பைரவசாமியாலும் இதைச் சரியாக விளக்க முடியவில்லை. சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது அப்படித்தான் பாஸ்கரன் சொல்லுகிறார் என்றே கூறினார்.

7. வெடிகுண்டுகள் செய்வதில் கை தேர்ந்தவராகச் சொல்லப்படுகிற சக்திவேலுவின் வீடு இதுவரை சோதனை செய்யப்படாதது வியப்பாக உள்ளது.

எமது கோரிக்கைகள்

1. இப்பகுதியில் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த ரவுடிக் கும்பல்களைக் கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படாததே இன்றைய சம்பவங்களுக்குக் காரணம். இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இதரர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குக் காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. ஆள்மாறாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி ஜெகதீசன் குடும்பத்திற்கு அரசு இதுவரை எந்த உதவியும் செய்யாதது வருந்தத்தக்கது. ஆறாவது வகுப்புவரை படித்த அவரது மனைவி பேபி, மூன்றரை வயதுப் பெண்குழந்தை சரண்யா, பிறந்து 10 நாட்களே ஆன இன்னொரு ஆண் குழந்தை ஆகியோர் இன்று அனாதைகள் ஆகியுள்ளனர். பேபிக்கு அவரது தகுதிக்கேற்ற ஒரு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அக்குடும்பத்திர்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் மாநில அரசை வற்புறுத்துகிறோம்.

3. குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் போலீஸ் சொல்லுகிற கதையில் பல அம்சங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை. சரணடந்த சக்திவேலைக் கொண்டு சென்று சுட்டுள்ளனர் என்றே நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான விசாரணையைப் புதுச்சேரி போலீசிடம் ஒப்படைத்தால் உண்மைகள் வெளிவராது என்பதால் இவ்விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பங்குபெற்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

இறுதியாக

எங்கள் குழு நேற்று உறுவையாறு சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது கணுவாப்பேட்டை ரமேஷ் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் எங்களை வழிமறித்து முற்றுகையிட்டுத் தாக்க முயற்சித்தது. ஜெகதீசன் கொலை செய்யப்பட்டதைச் சரி எனச் சொல்வதற்காக நாங்கள் வந்திருப்பதாகக் கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூர் பகுதி மக்களிடம் பொய்கூறி அவார்களை உணர்ச்சிவயப்படச் செய்து ஒரு டாடா ஏஸ் வேனில் ஏற்றி வந்து கலாட்டா செய்தனர், நாங்கள் சென்றிருந்த டாடா சுமோ காரின் (டி.என்.31, ஏசி 0154) முன்பக்கக் கண்ணாடியை (wind screen) உடைத்து நொறுக்கினர். பாதுகாப்புக் கோரி நாங்கள் அப்பகுதி ஆய்வாளர் பாஸ்கரனையும் எஸ்.எஸ்.பி ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் செல்பேசியை எடுக்கவேயில்லை. எல்லாம் முடிந்த பின்பே ஆய்வாளர் ஃபெலிக்ஸ் அவ்விடத்திற்கு வந்தார்.

எங்கள் பயணம் வெளிப்படையானது. முன்னதாக நாங்கள் அறிவித்தே இப்பகுதிக்குச் சென்றோம். காவல் துறையினர் முன்னதாகச் சென்று எங்களுக்கு எதிராக இப்படியான ஒரு வன்முறையைச் செய்யத் தூண்டியதாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்துள்ளன.

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. யாராக இருந்தபோதும் பிடித்துச் சட்டப்படி விசாரிக்க வேண்டும். போலீசே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தண்டனை அளிப்பதை நீதியில் அக்கறை உள்ள யாரும் ஏற்க முடியாது. அப்படியாயின் பின் நீதிமன்றங்கள் எதற்கு? சரணடைந்த ஒருவரைச் சுட்டு நிரந்தர முடமாக்குவதை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முயல்கிறோம்.

நமது நாடு ஐ.நா அவையின் Human Rights Defenders தொடர்பான அறிக்கையில் கையெழுத்துட்டுள்ள நாடு. இதன்படி மனித உரிமை காப்பாளர்களாகிய எங்களைப் போன்றோருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கவும், தேவையான விவரங்களைத் தரவும், எங்களின் விவர சேகரிப்பிற்கு உதவி செய்யவும், இது தொடர்பான எங்களின் பிரச்சாரங்களைத் தடை செய்யாமலிருக்கவும் வேண்டும்.

தவிரவும் சென்ற ஆண்டு இறுதியில் இது போன்ற ஒரு மனித உரிமைச் செயல்பாட்டுக்கு எதிராகத் தடை முயற்சி ஒன்றைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அம்முயற்சியைக் கண்டித்து முறியடித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் (Writ petition MD No: 12208 of 2011 and MP (MD) Nos 1 & 2 of 2011 Dated 21-10-2011). இத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர். இராமசுப்பிரமணியம் அவர்கள் இது போன்ற மனித உரிமை அமைப்புகள் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் ஆற்றியுள்ள பங்கைக் குறிப்பிட்டதோடு, இது போன்ற மனித உரிமைச் செயற்பாடுகளை ஒரு “மூன்றாவது விசாரணை முகமை ”Third investigation agency) எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் உண்மையறியும் குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டவர் மகாத்மா காந்தி அடிகள். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் தொடர்பாக அவர் தலைமையில் சென்று அளித்த உண்மை அறியும் குழு அறிக்கை உலகப் புகழ் பெற்றது.

ஆனால் தமிழக மற்றும் புதுவைக் காவல்துறையினர் மனித உரிமை முயற்சிகளை முறியடிக்க இது போன்ற சதிகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது. நேற்று நடந்த சம்பவம் குறித்து புகார் ஒன்றைக் காவல்துறையிடம் அளித்துள்ளோம். இது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து நேரடிக் கவனம் செலுத்துமாறு முதல்வர் ரங்கசாமி அவர்களைக் கோருகிறோம்.

புதுச்சேரியில் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம்: உண்மை அறியும் குழு அமைப்பு
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.04.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அருகே உறுவையாறு பகுதியில் சக்திவேல் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிப்படுத்த மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சக்திவேல் என்பவரை கடந்த 24ந் தேதியன்று உறுவையாறு சவுக்குத் தோப்பில் புதுச்சேரி போலீசார் துப்பாகியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அளிக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதோடு, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிந்து வெளிப்படுத்த மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வரும் 30ந்தேதி திங்களன்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் விசாரணை மேற்கொள்ளும். மேலும், காயம்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சக்திவேல் மற்றும் காயம்பட்ட போலீசார், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் என அனைவரையும் நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.

உண்மை அறியும் குழுவின் அறிக்கை உரிய நடவடிக்கைக்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு முறையே அனுப்பி வைக்கப்படும்.

ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை
புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் 09.04.2012 அன்று காலை 11.30 மணியளவில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரங்கமான ஏனத்திலுள்ள ரீஜன்சி செராமிக்ஸ் எனும் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டத்தின் உச்சகட்டமாகச் சென்ற ஜனவரி 27 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் மச்ச சோமேசுவர முரளிமோகன் போலீசரால் அடித்துக் கொல்லப்பட்டார். அதைக் கண்டு கொதித்தெழுந்த அவரது ஆதரவாளர்கள் தொடுத்த தாக்குதலில் தொழிற்சாலையின் சொத்துக்கள் சேதமானதோடு, அந்நிறுவனத்தின் மேலாளர் கே.சி.சந்திரசேகரன் என்பவரும் கொல்லப்பட்டார். அதை ஒட்டிப் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். தொழிற்சாலை நிர்வாகம் தன்னிச்சையாக லாக் அவுட் அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 3000 தொழிலாளிகள் இன்று வேலையின்றி வீதியில் நிற்கின்றனர். மேலாளர் கொலை மற்றும் கலவரம் தொடர்பாக சுமார் 41 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டினியில் வாடும் தொழிலாளர் குடும்பங்கள் ஆலையை திறக்கச் சொல்லியும், முரளி மோகனின் கொலைக்கு நியாயம் கோரியும் போராடும் செய்தி தொடர்ந்து நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன.

தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் உரிமைகளிலும் சமூக அமைதியிலும் அக்கறை உள்ளவர்கள் என்கிற வகையில் கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் சென்ற ஏப்ரல் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஹைதராபாத், காக்கிநாடா, ஏனம், டி.கோத்தபள்ளி ஆகிய பகுதிகளுக்குச் சென்று தொடர்புடைய பலரையும் சந்தித்தோம். கோத்தபள்ளியில் வசிக்கும் முரளி மோகனின் மனைவி, தாயார், ஊர் மக்களில் சிலர், ஹைதராபாத்தில் தொழில் புரியும் மூத்த வழக்கறிஞர் பொஜ்ஜா தாரகம், தொழிற்சங்கத் தலைவர் சீனிவாச ராவ், ஏனத்தின் நிர்வாக அதிகாரி ஏ.வி.சுப்பிரமணியன், ஏனம் காவல் துறைக் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ், தற்போதைய ஏனம் காவல் நிலையப் பொறுப்பாளர் பால், ஏனம் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் எஸ்.பிரபாகரன், ஏனம் சிறப்புத் துணைச் சிறையில் உள்ள சத்திய நாராயணா உள்ளிட்ட சில கைதிகள், துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்ட ரீஜன்சி ஊழியர் கெட்டம் ஜார்ஜ் விக்டர் பாபு, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகபு சுப்பாராவ். அ.தி.மு.க தலைவர் சாய்குமார் மற்றும் பல தொழிலாளிகள் ஆகியோரிடம் விரிவாக உரையாடினோம். மூடிக் கிடக்கும் ரீஜன்சி தொழிற்சாலைக்குள் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அதை வெளிப்புறமாகச் சுற்றிப் பார்த்ததோடு அதன் பயன்பாட்டு மேலாளர் (utility manager) ராஜேந்திர பிரசாத்திடம் தொலைபேசியில் உரையாடினோம். தொழிலாளர்களுக்கு ஆதரவாக காக்கிநாடாவில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டதோடு அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் நாகேஸ்வர ராவ், மாவட்டச் செயலாளரும் சம்பவ தினத்தில் களத்தில் இருந்தவருமான சேஷு பாப்ஜி, ரீஜன்சி தொழிற்சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் வில்சன் ஆகியோருடனும் பேசினோம்.

முரளிமோகனின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது இறப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, ரீஜன்சி மேலாளர் காமேஸ்வர வஜ்ஜலு கலவரம் தொடர்பாக அளித்த புகார் மனு, அதன் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் சேகரித்து விரிவாக ஆய்வு செய்தோம்.

பின்னணி:

1. புதுச்சேரி மாநிலத் தலைநகரிலிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய நிர்வாகப் பகுதி ஏனம். சுமார் 30 ச.கி.மீ பரப்பும், 33,000 மக்கள் தொகையும் உள்ள இச்சிறு பகுதியில் உள்ள 3 பெரிய தொழில் நிறுவனங்களில் முதன்மையானது ரீஜன்சி செராமிக்ஸ். இந்தத் துறையில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான இது மிகவும் லாபகரமாகச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம். பல துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது இது. புதுவை அரசின் பல மானியங்களையும் உதவிகளையும் பெற்று வரும் இந்நிறுவனத்தில் சுமார் 3000 ஊழியர்கள் பல மட்டங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே (970) நிரந்தர ஊழியர்கள். பிறர் ஒப்பந்தத் தொழிலாளிகள். சுமார் 12 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள்கூடப் பெறுகிற அதிகபட்ச மாத ஊதியம் 5000 ரூபாய்க்கும் குறைவே. போனஸ், முறையான ஊதிய உயர்வு எதுவும் கிடையாது. எட்டு மணி நேர வேலை, வேலைத் தளத்தில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள், ஓவர் டைம் பணி ஊதியம் எதுவும் கிடையாது. சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை எந்தச் சங்கமும் உள்ளே இயங்க அனுமதிக்கப்பட்டதுமில்லை.

2. மொத்த ஊழியர்களில் பெரும் பகுதியினர் சுற்று வட்டாரத்திலுள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 சத ஊழியர்கள் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஏனம் பகுதியில் மிகவும் செல்வாக்குள்ள அரசியல்வாதியான மல்லாடி கிருஷ்ணா ராவுடன் மிகவும் நெருக்கமான உறவை இந்நிறுவனம் பேணி வருவதை இந்து போன்ற நாளிதழ்களே சுட்டிக் காட்டியுள்ளன (ஜனவரி 29, 2012). முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுடனும் நெருக்கமாக இன்றும் உறவைப் பேணி வருபவர்.

4. ஏனத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள டி.கோத்தபள்ளி (ஆந்திர மாநிலம்) கிராமத்தைச் சேர்ந்த முரளி மோகன் சென்ற மூன்றாண்டுகளுக்கு முன் முதன் முதலாக ரீஜன்சி தொழிற்சாலைக்குள் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவினார். முரளி ஒரு தலித் என்பதும் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1994 வாக்கில் சங்கம் ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நிர்வாகம் வெற்றிகரமாக முறியடித்ததைப்போல இம்முறை செய்ய இயலவில்லை. நிரந்தரத் தொழிலாளிகளில் சுமார் 700 பேர்கள்வரை முரளியின் “ரீஜன்சி செராமிக்ஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் யூனியனில்” உறுப்பினர்கள் ஆயினர். சங்கத்தை முறைப்படிப் பதிவு செய்வதிலும் அவர்கள் வெற்றி பெற்றதைக் கண்டு ஆத்திரமுற்ற நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகிப் பதிவை ரத்து செய்தது. வழக்காடி இந்த நீதிமன்றத் தடையையும் வெற்றிகரமாகச் சங்கம் கடந்தது. சென்ற மே தினத்தை மிகவும் கோலாகலமாக அவர்கள் கொண்டாடியதைக் கண்டு ஆத்திரமுற்ற நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. சுமார் 50 பேர்களை வேலை நீக்கம் செய்தது, சுமார் 12 பேர்களை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்தது. வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் சங்க நிறுவனர் முரளி மோகனும் ஒருவர். இந்த நடவடிக்கைகளை எதிர்த்தும், போனஸ், ஊதிய உயர்வு முதலான நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்தும் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது. வேலை நிறுத்தம், பேச்சுவார்த்தைகள், சங்க உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு கொடிய நிபந்தனைகளுடன் கூடிய உறுதிமொழி அடங்கலில் கையெழுத்திட்டால்தான் வேலைக்கு அனுமதிக்க முடியும் என நிர்வாகம் பிடிவாதம் பிடித்தல் என்பதாகப் பிரச்சினைகள் தொடர்ந்தன.

5. இங்கொன்றைச் சொல்வது முக்கியம். ஆந்திர மாநிலத்தின் அமலாபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியும் தனது தூரத்து உறவினருமான ஜி.வி.ஹர்ஷ குமாரை தனது சங்கத்தின் கவுரவத் தாலைவராக அறிவித்திருந்தார் முரளி. ஹர்ஷ குமார் காங்கிரஸ் கட்சிக்குள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு எதிரானவர். அவ்வகையில் மல்லாடிக்கு எதிரணியில் இருப்பவர். எனவே மல்லாடிக்கு வேண்டிய ரீஜன்சி நிர்வாகத்திற்கு எதிரான சங்கத்தின் கவுரவத் தலைவர் பொறுப்பை அவர் விருப்புடன் ஏற்றுக் கொண்டார். தொழிலாளிக:ள் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலித்கள் என்பதும், இவர்களின் ஆதரவு ஏனத்தைச் சேர்ந்த மல்லாடிக்குத் தேவைப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. போராட்டத்தின் ஊடாகப் பல கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க வேண்டியதாயிற்று. 5000 ரூ போனஸ், ஏப்ரல் 2012 முதல் ஊதிய உயர்வு ஆகியவற்றையும் கூட ஏற்றுக் கொண்ட நிர்வாகம் முரளி மோகனின் வேலை நீக்கத்தை மட்டும் ரத்து செய்யத் தயாராக இல்லை. இந்த அம்சத்தில் விட்டுக் கொடுக்க சங்கமும் தயாராக இல்லை. எனவே வேலை நிறுத்தம் தொடர்ந்தது ஒப்பந்த ஊழியர்களை வைத்து ஆலையை இயக்க நிர்வாகம் முயன்றது. சென்ற ஜனவரி 27 அன்று அதிகாலையில் வேலைக்குச் செல்ல இருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளிடம் பேசித் தடுப்பதற்காகச் சென்ற முரளியையும் அவரது தோழர்களையும் தடியடிப் பிரயோகம் செய்து கைது செய்தது புதுச்சேரி காவல்துறை. முரளியைக் குறி வைத்துத் தாக்கிய அவர்கள், போலீஸ் வாகனத்துக்குள்ளேயே அவரைக் கிடத்தி லத்தியால் நெற்றி மற்றும் இடப்புற மார்பில் குத்தினர். இதன் விளைவாகக் காவல் நிலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கொஞ்ச நேரத்தில் முரளி இறந்தார். தொடர்ந்த நிகழ்வுகள் எல்லோரும் அறிந்ததே.

எமது பார்வைகள்:

1. முரளியின் மரணம் மிகவும் தெளிவான ஒரு காவல் நிலையச் சாவு (a clear case of custodial death). காவல் நிலயத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டதையும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னதையும் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையே ஏற்றுக் கொள்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையும் இதை ஏற்றுக் கொள்கிறது. எனவே இது அய்யத்திற்கு இடமற்ற ஒரு தெளிவான காவல் நிலையச் சாவு. திருத்தப்பட்ட குற்ற நடைமுறைச் சட்டத்தின் 176 (1) (ஏ) பிரிவின்படி இதை ஒரு நீதித்துறை நடுவரே விசாரிக்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு மாறாக விசாரணைப் பொறுப்பு காக்கிநாடா ஆர்.டி.ஓவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஒரு விதி மீறல்.

2. தன் கணவர் காவல் நிலயத்தில் இறந்து போனது குறித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடனடியாக முரளியின் மனைவி புகார் அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை முரளியின் உடலில் குறிப்பாக நெற்றியிலும், இருதயத்திற்கு நேர் மேலாக இடது மார்பிலும் புறக் காயங்கள் இருந்ததை சுட்டிக் காட்டியபின், காவல் நிலையச் சித்திரவதையாலேயே தன் கணவரின் மரணம் நிகழ்ந்ததெனக் குற்றஞ்சாட்டி முரளியின் மனைவி மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். ஆலை நிர்வாகத்தின் புகாரை ஏற்று 41 பேர்களைக் கைது செய்துள்ள புதுச்சேரி அரசு இதுவரை முரளியின் மனைவி அளித்துள்ள இப்புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி பல அய்யங்களுக்கும் காரணமாகிறது.

3. முரளியின் மரணத்தில் முக்கிய பங்காற்றியுள்ள மூன்று காவல்துறை அதிகாரிகள் வருமாறு: ஏனம் வட்ட காவல் ஆய்வாளர் பெரியசாமி, ஏனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி.வீரபத்ரசாமி, ஐ.ஆர்.படாலியன் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வன். இவர்கள் மூவரும் ஆலை நிர்வாகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதைப் பலரும் எங்களிடம் கூறினர். குறிப்பாக வட்ட ஆய்வாளர் பெரியசாமி நிர்வாகத்திற்கும் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கும் மிக நெருக்கமாக இருந்துள்ளார். நிர்வாகத்தின் வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட அவர் மீது பல புகார்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்து காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் நாங்கள் கேட்டபோது அத்தகைய புகார்கள் வந்துள்ளதாகவும் அவை விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். முரளி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஆலை நிர்வாகம் தனக்கு எடுபிடியாக இருந்த காவல்துறையினரை வைத்துத் திட்டமிட்டு மேற்கொண்ட கொலையாகவே இதைக் கருதவேண்டியுள்ளது. வேலைக்குச் செல்லமுயன்றவர்களிடம் அமைதியான முறையில் பேசிக் கொண்டிருந்தவர்களைக் கைது செய்து இப்படிக் கொடூரமாய்த் தாக்கியதை வேறு எப்படியும் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலாளர் சந்திரசேகர் கொலை உட்படப் பின்னர் நடந்த அனைத்துச் சம்பவங்களுக்கும் காவல்துறையின் இந்த அத்துமீறலே காரணமாகியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

4. பின்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் எந்தவித முன்னெச்சரிக்கைகளும் செய்யாமல் நடத்தப்பட்டுள்ளது. முறையான சட்ட ஒப்புதல் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

5. பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆலைச் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை, மேலாளர் கொலை செய்யப்பட்டது அனைத்தும் கண்முன் முரளி கொலை செய்யப்பட்டதைக் கண்ட உணர்வெழுச்சியின் விளைவே. இதில் சதி அம்சம் (conspiracy aspect) ஏதும் கிடையாது. இதில் தொழிலாளிகளின் பங்கைக்காட்டிலும் பிற ஊர்ப் பொதுமக்களின் பங்கே அதிகமாயுள்ளதை முதல் தகவல் அறிக்கைகளும், இது தொடர்பான புகார்களும் உறுதி செய்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டவர்களிலும் தொழிலாளர்களைக் காட்டிலும் பிறரே அதிகம். தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலரும், குறிப்பாக முதல் ஐவரும் மல்லாடி கிருஷ்ணா ராவிற்கு அரசியல் ரீதியாக எதிரானவர்கள். அ.தி.மு.க தலைவர் சாய்குமார், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சுப்பாராவ் முதலானோர் இவ்வகையினரே. தவிரவும் சென்ற 11.11.11 அன்று நடைபெற்ற ஒரு காவல் நிலையச் சாவில் சாட்சிகளாக உள்ளவர்களும் இன்று குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. கலவரம் தொடர்பாக எங்கள் பார்வைக்கு வந்த சி.டிக்களில் ஒன்று மல்லாடி கிருஷ்ணாராவ் தயாரித்தது. தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஒளிப் பதிவுகளை வெட்டி ஒட்டித் தயாரித்தது இது. ஏனம் என்பது ஒரு மிகச் சிறிய ஊர், காவல் நிலையம், அரசு நிர்வாக அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை எல்லாம் மிக அருகருகே உள்ளன. இப்படியான ஒரு பிரச்சினை நடக்கும்போது ஊர்மக்கள் கூடுவது தவிர்க்க இயலாது. அப்படியாக வந்தவர்கள், சமாதானத்திற்கு முயன்றவர்கள், முரளியின் கொலையால் ஆத்திரப்பட்டுப் பேசியவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரில் தனது அரசியல் எதிரிகளை மட்டும் சிவப்பு வண்ணத்தில் வட்டமிட்டு, அம்புக் குறியிட்டு அந்தச் சி.டியைத் தயாரித்துள்ளார் கிருஷ்ணாராவ். போலீசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்த சி.டி.யின் அடிப்படையிலேயே இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு கிருஷ்ணாராவ் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு ஏற்கத்தக்க பிரச்சினை (valid dispute) இருந்துள்ளது. பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் அன்று நடந்த வருத்தத்திற்குரிய சம்பவங்களைக் காரணம் காட்டி நிர்வாகம் தன்மூப்பாக லாக் அவுட் அறிவித்துள்ளது சட்ட விரோதமானது. நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கே வர மறுக்கிறது என்றும் எந்தச் சமரசத்திற்கும் அது தயாரில்லை எனவும் ஏனம் தொழிலாளர் துறை அலுவலகப் பொறுப்பாளர் பிரபாகரன் எம்மிடம் கூறினார். அன்று நடந்த வருந்தத்தக்க நிகழ்வுகளில் தொழிலாளிகளுக்குப் பெரிய பங்கும் இல்லாதபோது நிர்வாகம் இத்தனை வன்மத்துடன் செயல்படுவதையும் சட்ட விரோதமாக லாக் அவுட் அறிவித்திருப்பதையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

8. தொழிற்சாலையைத் திறக்க முடியாது என்பதற்கு நிர்வாகம் சொல்லும் காரணம் அன்றைய கலவரத்தில் தொழிற்சாலை எந்திரங்கள் நாசமாகிவிட்டன என்பது. இது குறித்து இரு கருத்துக்கள் நிலவுகின்றன. அன்று நடந்த கலவரத்தில் எந்திரங்கள் எதுவும் சேதமாக்கப்படவில்லை. ட்ரக்குகள், லாரிகள், ஊழியர்களின் இரு சக்கர வானங்கள், உற்பத்தி செய்யப்பட்ட செராமிக் ஓடுகள் முதலானவற்றை ‘பாகிங்’ செய்வதற்காக இருந்த பொருட்களும் மட்டுமே சேதமாக்கவும், அழிக்கவும் பட்டன என்பது ஒரு கருத்து. பெரும்பாலன தொழிலாளர்களும் மூத்த வழக்குரைஞர் பொஜ்ஜா தாரகம் போன்றோரும் இப்படித்தான் கூறுகின்றனர். ஆனால் நிர்வாகமோ ‘கன்ட்ரோல் பானல்’ உள்ளிட்ட முக்கிய எந்திரங்கள் பழுதாகியுள்ளதால் தொழிற்சாலையை இயக்க முடியாது எனச் சொல்கிறது. நாங்கள் சந்தித்த அரசுப் பிரதிநிதிகளான ஏனம் நிர்வாக அலுவலர், காவல்துறைக் கண்காணிப்பாளர், தொழிலாளர் துறைப் பொறுப்பாளர் ஆகிய மூவருமே நிர்வாகத்தின் கருத்தையே பிரதிபலித்தனர். இவர்கள் முழுமையாக சேதங்களை ஆய்வு செய்யவில்லை என்பதோடு, அப்படியான முடிவுகளை எடுக்கத் தேவையான துறைசார் தகுதியும் அவர்களுக்குக் கிடையாது. எனினும் அதற்குரிய நிபுணர் குழு ஒன்றின் மூலம் மதிப்பிடுவதற்கு உரிய முயற்சிகள் எதையும் செய்யாது தொழிற்சாலை நிர்வாகத்தின் கருத்தை இவர்களும் அப்படியே பிரதிபலிப்பது லாக் அவுட் தொடர்வதற்குக் காரணமாக உள்ளது. 3000 குடும்பங்கள் இன்று பட்டினி கிடக்க நேர்ந்துள்ளது என்கிற கவலை அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை.

9. தொழிற்சாலைக்கு நேர்ந்த இழப்பீடு குறித்து நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லி வருகிறது. ஜனவரி 29 அன்று கலவரம் குறித்து தொழிற்சாலை மேலாளர் கொடுத்துள்ள புகாரில் 600 முதல் 700 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளார். அதற்கு முந்தைய நாள் வெளிவந்த இந்து நாளிதழில் ஆலை உரிமையாளர் ஜி.என் நாயுடு மொத்த இழப்பு 150 கோடி எனப் பேட்டி அளித்துள்ளார். சென்ற ஏப்ரல் 3 அன்று நாங்கள் மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவரிடம் பேசியபோது அவர் மொத்த இழப்பு 250 கோடிகள் என்றார். ஆனால் நாங்கள் விசாரித்த வரையில் இழப்பீடு அதிக பட்சம் 10 கோடிகளைத் தாண்டாது. சேத மதிப்பை அதிகமாகச் சொல்லி அரசு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் நிர்வாகம் கூடுதல் தொகையைப் பெற முயற்சிப்பதாகத் தெரிகிறது.

10. நாங்கள் சந்தித்த மக்கள் கூறிய வேறு இரு புகார்கள்: தொழிற்சாலை நிர்வாகம் நடத்துகிற பள்ளிகளில் பயிலும் தொழிலாளரின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இரு தவணைகளில் 12,000 ரூ கட்ட வேண்டுமென சம்பவத்திற்குப் பிறகு வற்புறுத்தப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட 41 பேரில் 20 பேர்களுக்குப் பிணையில் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதுச்சேரியில் தங்கி தினமும் கையொப்பமிட வேண்டும் என்பது நிபந்தனை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் ஒருபுறமிருக்க, ஓர்லையன்பேட்டை காவல் நிலயத்தில் இவர்கள் கையொப்பமிட வரும்போது நிலையத்திலுள்ளோர் ஒவ்வொரு முறையும் 100 ரூ கொடுக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பதாகச் சிலர் கூறினர்.

எமது கோரிக்கைகள்:

இரண்டு அம்சங்கள் இதில் கவனத்திற்குரியன. ஜனவரி 27 சம்பவங்கள் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. இதிலேற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகளும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடியின் தலையீடும் விரிவாக மேலே சொல்லப்பட்டுள்ளன. இரண்டாவது அம்சம் மூடிக் கிடக்கும் தொழிற்சாலையை உடனடியாகத் திறப்பது. 3000 குடும்பங்களின் பட்டினியைத் தீர்ப்பது.

புதுச்சேரி அரசு இந்த இரு அம்சங்களிலும் காட்டியுள்ள மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத் தலைமையகத்திற்கும் ஏனத்திற்குமுள்ள புவியியல் இடைவெளியும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவாக இன்று அம்மக்கள் நீதி கோரி ஆந்திர மாநில அரசிடம் முறையிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சென்ற இரண்டாம் தேதியன்று அத்தகைய போராட்டமொன்று காக்கிநாடாவில் நடைபெற்றது. ஆலையைத் திறக்க வேண்டும், அதுவரை மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் அக்குடும்பங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள். புதுச்சேரி மாநில நிர்வாகத்தின் செயலின்மையின் விளைவு இது. இத்தகைய நிலை தொடர்வது புதுச்சேரி மாநில ஒற்றுமைக்கு உகந்ததல்ல.

புதுச்சேரி அரசு உடனடியாகக் கிழ்க்கண்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. ஜனவரி 27 சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் கொடுத்த அழுத்தத்தின் விளைவு இது. தாமதமின்றி இவ்விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதோடு அதுவரை பழிவாங்கும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும். முரளியின் காவல் நிலைய மரணம், மேலாளர் சந்திரசேகரின் கொலை, தொழிற்சாலைக் கலவரம், துப்பாக்கிச் சூடு ஆகிய நான்கு நிகழ்வுகளும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் அவசியம். சம்பவத்திலும் அதற்குப் பிந்தைய நடவடிக்கைகளிலும் மல்லாடியின் பங்கும் விசாரிக்கப்பட வேண்டும்.

2. காவல்நிலையச் சாவு ஏன் அதற்குரிய சட்டப்படி நீதித்துறை நடுவரால் விசாரிக்கப்படவில்லை என்பதற்கும் இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் பெரியசாமி, வீரபத்ரசாமி, செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரையும் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்குமான தொடர்பும் விசாரிக்கப்பட வேண்டும்.

3. தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் காவல் நிலையத்தில் இறந்துள்ளார். போலீஸ் சுட்டதில் 9 தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை அரசு அவர்களுக்கு இழப்பீடுகள் எதையும் வழங்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முரளியின் குடும்பத்திற்கு 25 லட்சமும், குண்டடிப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 லட்சமும் அளிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும் கோரியுள்ளன. இந்த நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முரளியின் மனைவிக்கு அரசு வேலை அளிக்கப்பட வேண்டும்.

4. ஓரளவு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி வந்தவர் என எல்லோராலும் போற்றப்படும் ஜவஹர் ஐ.ஏ.எஸ் ஏன் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டார் எனப் புரியவில்லை. தகுதியான நிர்வாகி ஒருவரை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக ரீஜன்சி தொழிற்சாலையை உடனடியாகத் திறக்க ஆவன செய்ய வேண்டும். நிர்வாகம் அறிவித்துள்ள லாக் அவுட்டைச் சட்ட விரோதம் என அரசு அறிவிக்கத் தயங்கக் கூடாது. அருகிலுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து, தொழிற்சாலை உடனடியாக இயங்க முடியாத அளவிற்கு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன என்பது உண்மையா என்பதையும் மொத்த சேதங்களின் அளவையும் மதிப்பிட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்கச் செய்ய வேண்டும். கூடவே முதலமைச்சர் தலைமையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை ஒன்றுக்கு அரசு ஏற்பாடு சேய்ய வேண்டும். தொழிற்சாலையைத் திறக்க இயலாது எனவும், பேச்சு வார்த்தைகளுக்கு ஒத்துழைக்க முடியாது எனவும் நிர்வாகம் கூறும் பட்சத்தில் அரசே தொழிற்சாலையை எடுத்து நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.03.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்திடும் வகையில் முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை உலக நாடுகள் பலவும் ஆதரிக்க முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதற்காக புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கக் கூட்டத்தைக் கூட்டி இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வழக்கம் போல் முதல்வர் ரங்கசாமி இந்தப் பிரச்சனையிலும் மெளனம் காப்பாரானால் உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள் என்பதோடு, வாக்களித்த தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்ற அவப்பெயரை எடுக்க நேரிடும் என எச்சரிக்கின்றோம்.

57 பேரின் கதி என்ன? சிறைக்குள் சில கேள்விகள் – மீடியா வாய்ஸ்

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை
வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

2. பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.

3. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

4. வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.

5. வழக்கறிஞர் மனோகரன், சென்னை.

6. மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPJ), சென்னை.

7. சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.

8. வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO).

9. நிர்மலா கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு (MASES).

10. சந்திரா, எழுத்தாளர், சென்னை.

இக்குழுவினர் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துறை ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஆகியோரை சந்தித்தனர் அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடு இருப்பதை எங்களால் காண முடிந்தது. அவை:

1. நாங்கள் சந்தித்த மக்கள் சுமார் 10 அல்லது 10.30 மணியளவிலேயே காவல்துறையினர் அங்கு வந்தனர் என கூறினர். தொலைக்காட்சி தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும் காவல்துறையினர் கதவுகளையும், சன்னல்களையும் சாத்தி விளக்கை அணைக்குமாறு எச்சரித்ததாகவும் பலரும் கூறினர். காவல்துறை ஆணையர் என்கவுன்டர்களுக்குப் பின் பத்திரிகைகளுக்கு அளித்த செய்தியில் இரவு 12.30 மணியளவிலேயே கொள்ளையர்கள் ஒளிந்திருக்கும் தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னரே அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த முரண் குறித்து நாங்கள் ஆணையர் திரிபாதி அவர்களிடம் கேட்ட போது மேஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ள நிலையில் தான் பதில் கூற இயலாது எனக் கூறினார். வேறு பல கேள்விகளுக்கு எங்களிடம் விளக்கமாகப் பேசிய ஆணையர் இதற்கு மட்டும் மேஜிஸ்ட்ரேட் விசாரணையை காரணமாக சொல்லியது அவரிடம் இதற்குப் பதில் இல்லை என்பதையே காட்டியது.

2. சன்னல் வழியாக ஒளிந்திருந்தவர்கள் சுட்டதாகவும், தாங்கள் தற்காப்பிற்காக சுட்டதாகவும் ஆணையர் சொன்னதைப் பத்திரிகைகள் பல “கதை” என்றே எழுதின. இதற்கு ஆதாரமாகப் பத்திரிகைகள் இரு காரணங்களைச் சுட்டிக்காட்டின. ஒன்று: இருதரப்பிற்கும் பெரிய அளவு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான வெடிச் சத்தங்களை யாரும் கேட்கவில்லை. இரண்டு: சன்னலிலோ, சன்னல் கம்பிகளிலோ குண்டுக் காயங்கள் எதுவும் கிடையாது. குண்டுகள் பாய்ந்த மட்டத்திலேயே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றிலும் குண்டுக் காயங்கள் இல்லை. சுவரிலும் இரண்டு குண்டுக் காயங்கள் மட்டுமே இருந்தன. இரத்தக்கறைகூட தரையில் மட்டுமே இருந்தது. நாங்கள் சந்தித்த மக்களும் சத்தங்கள் கேட்டதென்றாலும், நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த சத்தம் கேட்டதாக சொல்லவில்லை. வீட்டைப் பார்வையிட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களால் சண்டை நடந்த்தாகச் சொல்லப்படும் இடத்தைப் பார்க்க முடியவில்லை. இதுகுறித்தும் ஆணையர் அவர்களிடம் பதில் இல்லை.

நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றவுடன் அந்த வீடு இருந்த சந்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொன்னார்கள். அருகில் சென்று வெளியில் இருந்து பார்க்ககூட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவெனில் பக்கம் மற்றும் எதிர் வீட்டிலுள்ள மக்களையும் சந்திக்க விடவில்லை. இப்படி சுற்றியுள்ள மக்களைக்கூட சந்திக்க விடாமல் தடுத்தது மர்மமாக உள்ளது. காவல்துறை எதையோ மறைக்க விரும்புவதையே இது காட்டுகிறது.

காவல்துறை இந்த என்கவுன்டர் கொலைகளைப் பற்றி சொல்லுகிற செய்தி எல்லாமே வழக்கமாக எல்லா என்கவுன்டர்களிலும் சொல்லுகிற கதையை ஒத்ததாகவே உள்ளது. ‘நாங்கள் சென்று அவர்களைச் சரணடையச் சொன்னோம். அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டோம். அவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே செத்துப் போனார்கள். எங்களில் இருவருக்கு மட்டும் லேசான காயம்’ – என்கிற கதை நாம் வழக்கமாக கேட்பதுதான். இங்கும் காவல்துறை அதைத்தான் சொல்லுகிறது. ஒளிந்திருந்தவர்கள் இருந்த வீடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட ஒற்றைப் படுக்கை அறை இல்லம். காவல்துறை சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட கிட்டத்தட்ட ஒரு பொந்தில் அடைப்பட்ட எலிகளைப் போலத்தான் அவர்கள் ஐவரும் அங்கு அடைந்திருக்கின்றனர். காவல்துறை நினைத்திருந்தால் ஒன்று அவர்களை முற்றுகையிட்டு, தேவையானால் ஒரிரு நாட்கள் வரை முற்றுகையை நீடித்து அவர்கள் அனைவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம். அல்லது கமாண்டோ படையினரைக் கொண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களில் ஒரு சிலரையாவது உயிருடன் பிடித்திருக்கலாம்.

அப்படி உயிருடன் பிடித்திருந்தால் விசாரணையில் மேலும் பல உண்மைகள் நமக்குத் தெரிய வந்திருக்கும்.

இங்கொன்றை எமது குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. என்கவுன்டர் நடப்பதற்கு முன்னதாகவே, இண்டாவது வங்கிக் கொள்ளை நடந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே இதைச் செய்தது பீகாரைச் சேர்ந்த கும்பல்தான் என்று போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது (பிப்ரவரி 22). இது எப்படி அவர்களுக்குத் தெரிய வந்தது எனில் இதேபோன்ற வங்கிக் கொள்ளைகளைப் பீகாரைச் சேர்ந்த கும்பல் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடத்தியதாகவும், அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து விசாரித்ததில் சென்னையிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்ட இருப்பதாக செய்தி கிடைத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சுபோத் காந்த் சிங் எனகிற நபர் சில தகவல்களைக் கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். திங்கட்கிழமைகளாகப் பார்த்துக் கொள்ளையடிப்பது, சி.சி. டிவி கண்காணிப்பு இல்லாத அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைத் தேர்தெடுப்பது, பொம்மைத் துப்பாக்கிகளை வைத்து மிரட்டுவது ஆகியன இந்த கும்பலின் கொள்ளையடிக்கும் முறை (modus operandi) எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கத்தக்கன. ஒன்று: இந்த உண்மை தெரிந்ததன் விளைவாகவே தமிழக காவல்துறை பீகாரைச் சேர்ந்த கும்பலுடன் இக்கொள்ளையைத் தொடர்புப்படுத்தி விரைவாகத் துப்புத் துலக்க முடிந்தது. இரண்டு: தமிழக காவல்துறையைப் போல சந்தேகப்பட்டவர்களை என்கவுன்டரில் போட்டுத் தீர்க்காமல் மகாராஷ்டிர காவல்துறை முறையாக கைது செய்து விசாரித்ததாலேயே இந்த உண்மை இன்று பயன்பட்டுள்ளது. நமது காவல்துறை யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது ஒரு அதிரடி சாதனைச் செய்து தமிழகத்தை இன்று பாதித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைத் திருப்பவோ செய்த இந்த என்கவுன்டர் படுகொலைகளால் இன்று தமிழக காவல்துறை பல அரிய உண்மைகளை இழந்துள்ளது.

ஆணையரின் கூற்றுக்களைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. 22 இரவு அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது ஒளிந்திருந்தவர்கள் உண்மையிலேயே அந்தக் கொள்ளைகளைச் செய்தவர்கள்தானா என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. அன்று அவர்கள் வெளியிட்ட படத்தில் உள்ள ஒருவரசந்த வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே அன்று அங்கு சென்றதாக ஆணையர் எங்களிடம் கூறினார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சென்றவர்கள் அங்கிருந்த ஐவரையும் கொன்றதற்குச் சொல்கிற ஒரே காரணம் ‘அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காக கொன்றோம்’ என்பதுதான். இது ஏற்கத்தக்கது அல்ல. பொம்மைத் துப்பாக்கி வைத்துதான் வங்கிக் கொள்ளை அடித்ததாக முதல் நாள் ஆணையர் கூறியுள்ளார். கொள்ளயர்கள் வைத்திருந்ததாக இப்போது காட்டப்படும் துப்பாக்கிகள்கூட நாட்டுத் துப்பாக்கிகள்தான். இந்நிலையில், அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்களைத் தேவையானால் வெளியேற்றிவிட்டு, அவர்களை உயிருடன் பிடிக்கும் அளவுக்குத் திறமையுள்ளதுதான் நமது காவல்துறை. அதற்கான முயற்சியில் எள்ளளவும் இறங்காமல், அத்தனை பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன் காவல்படை சென்றுள்ளது என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம்.

காவல்துறையினர் கைது செய்ய செல்லும் போது கைதாக வேண்டியவர்கள் வர மறுத்தால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமுண்டு. (பிரிவு 46). இந்த வன்முறை கொலை என்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டத்தில் அனுமதியுண்டு. ஆனால், கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவிற்குரிய குற்றத்தைச் செய்தால் மட்டுமே அவரைக் கொல்லலாம் (46 [3]). அன்று கொல்லப்பட்டவர்களைப் பொருத்தமட்டில் இன்று காவல்துறை என்னென்ன கூடுதல் தகவல்களைத் தந்த போதும், அன்றைய அளவில் அவர்கள் வெறும் சந்தேகத்திற்குரிய நபர்களே. அவர்கள் கொலைக் குற்றம் செய்தவர்களும் அல்ல. அவர்கள் ஐவரையும் அன்று கொன்று குவித்தது சட்ட ரீதியில் ஏற்புடையதல்ல. இதுகுறித்து ஆணையரை நாங்கள் கேட்ட போது அவர் சற்றுக் கோபமடைந்தார். எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது எங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லாவிதமான உரிமைகளும் எங்களுக்கு உண்டு என்று கூறினார்.

உண்மைதான். ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலையும் செய்யலாம். காவல்துறைக்கு மட்டுமல்ல எல்லா குடிமக்களுக்குமே இந்த உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு கொலை நிகழும்போது அது கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும். கொலையைச் செய்தவர் நீதிமன்றத்தில் இந்திய சாட்சியச் சட்டத்தின் 105ம் பிரிவின்படி, தான் தற்காப்பிற்காகவே இந்தக் கொலை செய்ய நேர்ந்தது, வேறு வழியே இல்லை என நிறுவும் பட்சத்திலேயே வழக்கில் இருந்து அவர் விடுதலை பெறலாம். இதுவும் குடிமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பொருந்தும். இதை நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜுவும், சி.கே.பிரசாத்தும் போலி என்கவுன்டர் கொலைகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. உச்சபட்ச தண்டனை என்ற அளவிலேயே இந்த கருத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

எமது பார்வைகளும், கோரிக்கைகளும்:

1. சந்தேகத்திற்குரிய ஐவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம், பிடித்திருக்க வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். சந்தேகத்திற்குரிய ஐவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது அற மற்றும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல புலனாய்வு நோக்கிலும் தவறானது. கொள்ளைக் கும்பலின் வீச்சு, தீவிரவாதத் தொடர்பு என பல உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு இவர்கள் கொல்லப்பட்டதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக்க் கண்டிக்கிறோம். இதில் பங்கு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. இது ஒரு போலி என்கவுன்டர் என்பதற்கான நியாயமான அய்யங்கள் உள்ளன. ஆணையர் திரிபாதி அவர்களால் இவை குறித்துத் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் கூறியுள்ள காரணங்கள் தவிர வேறு சில அய்யங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஒருவர் ஷூ கால்களுடன் இருந்த படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. அறைக்குள் இருந்தவர் ஷூ அணிந்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளைச் சம்பவங்கள் குறித்த எந்தத் தகவல்களையும் வெளியில் சொல்லக்கூடாது என வங்கி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. பெருங்குடி பரோடா வங்கி அதிகாரி திரு பாலாஜி எங்கள் குழுவினர் சென்றபோது ஏதும் பதில் கூற மறுத்துவிட்டார். இப்படி தகவல்களை வெளியே வராமல் தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுபோன்ற அய்யங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏற்புடையதல்ல. தமிழக அரசின் கீழுள்ள காவல்துறைப் பிரிவொன்றின் விசாரணை மூலம் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ. புலனாய்வு தேவை. நடந்துள்ள என்கவுன்டரில் ஐந்து இளைஞர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செயலின் கடுமை கருதி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தேவை.

3. தேசிய மனித உரிமை ஆணைய நெறிமுறைகளின்[படி ஆணையர் திரிபாதி, இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட என்கவுன்டர் குழு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.

4. 2007 ஆகஸ்ட் 8ல் வெளியிடப்பட்ட தமிழக அரசின் என்கவுன்டர் தொடர்பான நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலைகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்புக் குற்றச்சாட்டுகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன்படி கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்பில் ஏதாவது குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலோ அல்லது பீகார் அரசுத் தரப்பில் அய்யங்கள் எழுப்பப்பட்டாலோ அது உரிய முறையில் கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

5. மேற்கூறிய நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலையில் பங்குப் பெற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, ஊக்கப் பதவி உயர்வுகளோ அளிக்கப்படக் கூடாது. இங்கும் அது கடைபிடிக்கப்பட வேண்டும்.

6. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துக் கொண்டு இன்று தமிழகமெங்கிலும் உள்ள இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் (migrant labourers) மற்றும் மாணவர்கள் குற்றப்பரம்பரையினர் போல் நடத்தபடுவதாக எமக்க்ச் செய்திகள் வந்துள்ளன. அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய திருப்பூரில் சென்ற வாரத்தில் எல்லோரும் காவல்நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி பகுதியிலும்கூட சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டு ஆங்காங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சோதனைச் செய்யப்படுகிறார்கள் என அறிகிறோம். வங்கிக் கொள்ளை நடந்த பெருங்குடி முதாலான பகுதிகளில் வாழ்கிற. வடநாட்டார்போலத் தோற்றமளிக்கிற அனைவரும் இன அடிப்படையில் விசாரித்துப் பதிவு (racial profiling) செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் இவ்வாறு பட்டியல் எடுக்கப்படுவதை ஆணையரே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். எவ்வகையான தொழில் மற்றும் சங்க உரிமைகளுமின்றி கடுமையாகச் சுரண்டப்படும் இவர்களைக் குற்றப்பரம்பரையினரைப் போல நடத்துவது வருந்தத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் உலகமெங்கும் இவ்வாறு பணி செய்து கொண்டும், படித்துக் கொண்டும் உள்ளனர். உலகமயச் சூழலில் இத்ததைய புலம்பெயர்வுகள் அதிகமாகியுள்ள நிலையில் இத்தகைய நடைமுறை கண்டிக்கத்தக்கது.

7. ஊடகங்களும், சில அமைப்புகளும்கூட இவ்வாறு “வடநாட்டார்” மீது இனவெறுப்பு ஏற்படும் வகையில் எழுதவும் பேசவும் செய்கின்றனர். வடநாட்டைச் சேர்ந்தவர் என நினைத்து இன்று ஒரு ஆந்திர மாநிலத்தவரை மயக்கம் வரும் வரை அடித்துள்ள செய்தி படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் அவசியம். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.

8. வேளச்சேரியிலும் சென்னையின் வேறு சில பகுதிகளிலும் இந்த என்கவுன்டர் கொலைகளைப் பாராட்டி பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்கள் இவற்றில் தூக்கலாக ஒலிக்கின்றன. என்கவுன்டர் செய்த போலீசை வானளாவப் புகழ்வது ஒன்று. என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்ட ஆட்சியை வற்புறுத்தியும் இயங்குகிற மனித உரிமை அமைப்பினரைக் கடுமையாக கண்டிப்பது அடுத்தது. காவல்துறையின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அய்யம் ஏற்படுகிறது. . நேற்று இதுகுறித்து விசாரிக்க சம்பவம் நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் இத்துடன் இணைத்து நோக்கத்தக்கது. நாங்கள் சம்பவம் நடந்த வீதிக்குள் நுழைய காவல் துறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் சுற்றியுள்ள மக்கள் எங்களுடன் எவ்விதத் தயக்கமுமின்றி உரையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரிந்தவரை விளக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென அங்கு வந்த ஒரு சிலர் போலீசைப் புகழ்ந்துப் பேசியதோடு, எங்களை அவதூறாகப் பேசி அச்சுறுத்தித் தாக்க முயன்றனர். வெளியே போகாவிட்டால் விரட்டி அடிப்போம் என கிட்டத்தட்ட ஒரு தள்ளூமுள்ளூ நிலையே அங்கு ஏற்பட்டது. அங்கு காவலில் இருந்த போலீசார் எங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்ட போதிலும் கலாட்டா செய்தவர்களை அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் ராம சுப்பிரமணியன் அவர்கள் மனித உரிமை அமைப்புகளை ‘மூன்றாவது புலனாய்வு முகமை (third investigation agency)’ எனக் கூறி இத்தகையோர் மேற்கொள்ளும் உண்மை அறியும் பணிகளின் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பல வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதோடு,, இத்தகைய பணிகளைத் தடை செய்ய முடியாது எனத் தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைப் பாதுகாவலர்களைப் (Human Rights Defenders) பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணிக்கு அரசு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு சில வன்முறையாளர்களால் விரட்டப்பட்ட போது காவல்துறையினர் இதைக் கண்டுக் கொள்ளவில்லை. காவல்துறை தூண்டுதலே இதற்கு பின்னணியாக இருக்கலாம் என்கிற அய்யம் எங்களுக்கு உள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றை நாங்கள் ஆணையரிடம் அளித்துள்ளோம். இதன்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

27.02.2012 அன்று மதியம் 3 மணிக்கு சென்னை செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்ட பின்பும் குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்ட பின்னரும் தேச தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்திய பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதியார் பல்கலைக்கூட இசைத்துறை விரிவுரையாளர் போஸ் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியையும், தேசத் தலைவர்களான காந்தி, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரையும் இழிவுப்படுத்தி பேசியுள்ளார். இதுகுறித்து துறை விசாரணை நடந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி அரசு எவ்வித காரணமும் இல்லாமல் இந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

இதனைக் கண்டித்து அனைத்து சமூக மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் 10.10.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 7ந் தேதியன்று குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கு அனைத்து அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 17ந் தேதியன்று புதுச்சேரி தலைமைச் செயலருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்சொன்ன மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த தகவலை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென குடியரசுத் தலைவர் அலுவலக அதிகாரி ஜெயராஜன் கூறியுள்ளார்.

ஆனால், இதுநாள்வரையில் போஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையின் உத்தரவை புதுச்சேரி அரசு மதிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதுகுறித்து தலைமைச் செயலர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் குப்புசாமி மீது நடவடிக்கை கேட்டு அங்குள்ள விரிவுரையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இவர் வீட்டு வசதி வாரியத்தில் இருந்த போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார். இதுபோன்ற ஊழல் அதிகாரிகளை புதுச்சேரி அரசு பாதுகாத்து வருகிறது. எனவே, ஊழல் அதிகாரி குப்புசாமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசை எச்சரிக்கிறோம்.

ஐந்து கொள்ளையர்கள் என்கவுன்டர் கொலை – நீதி விசாரணை தேவை: மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு கிளை (Peoples Union for Human Rights – PUHR, TamilNadu Chapter) தலைவர் அ. மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (Federation for People’s Rights – FPR, Puducherry) செயலாளர் கோ.சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி (மதுரை) ஆகியோர் 23.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சென்னையில் சமீபமாக நடைபெற்ற இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படும் ஐவர் நேற்றிரவு தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிடுகிற தகவல்கள் வழக்கமாக இது போன்ற சம்பவங்களில் சொல்லப்படுபவைதான். நீதிமன்றத் தலையீடு, மற்றும் விசாரணைகளுக்குப் பின் இதுபோன்ற என்கவுன்டர் கொலைகள் பலவும் போலியானவை என நிரூபணமாகியுள்ளன. உச்சநீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் இவற்றைக் கண்டித்துள்ளன. எத்தகைய குற்றவாளியானாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதே நீதியாகும். இப்படி மோதலில் கொல்வது மனித உரிமை மீறல் மட்டுமல்ல பின்னணி உண்மைகளையும் ஒரே அடியாய் மறைக்கக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன.

ஐவரில் ஒரு சிலரைக்கூட ஒரு பெரும் போலீஸ் படையினரால் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஒரே நேரத்தில் ஒரு சில நிமிடங்களில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு 2008ம் ஆண்டு வெளியிட்ட நெறிமுறைகள் ஆகியன இதில் பின்பற்றப்பட வேண்டும். பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் இந்த என்கவுன்டர் கொலைகள் விசாரணை செய்யப்பட வேண்டும். என்கவுன்டர் செய்த காவலர்கள் தாங்கள் தற்காப்புக்காகத்தன் சுட்டுக் கொல்ல நேர்ந்தது என்பதை நிரூபிக்கும் வரை இது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். வீரப்பரிசுகள். முறை மீறிய பதவி உயர்வுகள் எதுவும் அவர்களுக்கு அளிக்கப்படக் கூடாது.

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்
- அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக அக்கறை உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட விஷயம் மட்டுமன்று. அதே குடும்பங்களைச் சேர்ந்த ஆறு அப்பாவி ஆண்கள் மீதும், கடலூரில் வாழ்ந்து வரும் அவர்களின் மேலும் மூன்று உறவினர்கள் மீதும் பொய் வழக்குப் போட்டு இன்னும் அவர்கள் சிறையிலுள்ளதைப் பலரும் அறியமாட்டார்கள். சமவெளிகளில் வாழும் இப்பழங்குடிமக்கள் ஒரு காலத்தில் குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டு கொடுமைக்காளானவர்கள்.. இப்படிச் சொல்வது கூட ஒரு வகையில் தவறு. ஏனெனில் அவர்கள் கொடுமைக்காளானது ‘ஒரு காலத்தில்’ மட்டுமன்று. இன்றளவும் நம் காவல்துறையும், வருவாய்த்துறையும் அவர்களைக் குற்றப் பரம்பரையாகவே கருதி வருகின்றன எனச் சொல்வதே சரியாக இருக்கும்.

இன்றளவும் கண்டுபிடிக்க இயலாத திருட்டு வழக்குகளை ‘முடித்து’ கோப்புகளை ‘மூடுவதற்கு’ அப்பாவி இருளர் ஆண்களின் மீது பழியைப் போட்டு அவர்களைச் சிறையில் அடைப்பதைத் தமிழகக் காவல் துறை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. கைது செய்து வழக்குப் போடுவதோடு முடிந்து விடுவதில்லை. அவர்களை அடித்து, உதைத்து, மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்து அக் ‘குற்றங்களை’ ஒப்புக்கொள்ளச் செய்வார்கள். இவர்களைப் பிடிப்பதற்காக ‘ரெய்ட்’ வரும்போது கண்ணில் படும் இருளர் பெண்களைத் தம் காம வெறியைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்துவதும் சம அளவில் நிகழும். சில நேரங்களில் பெண்களைக் கொண்டு போவதற்காகவே ‘குற்றங்களைத்’ தேடிக் கண்டுபிடித்து வருவதுமுண்டு.

காலங்காலமாக நடந்து வந்த இக்கொடுமைகள் ஒரளவு சமூக மற்றும் ஊடகக் கவனம் பெற்றது அத்தியூர் விஜயா (1993) பிரச்சினையில்தான். விஜயாவுக்கு அண்ணன் முறையுள்ள வெள்ளையன் என்பவரைத் தேடி வந்ததாகச் சொன்ன புதுச்சேரி காவல்துறையினர் விஜயாவையும் அவரது பெற்றோரையும் சேர்த்து இழுத்துச் சென்றனர். விஜயாவை மட்டும் வாகனத்தை விட்டு இறக்கிச் சென்ற ஆறு போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணை மாறி மாறி வன்புணர்ச்சி செய்தனர். அந்தப் பெண் அடைந்த துன்பம் ஒருபுறமிருக்க என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் ஒன்றும் செய்ய இயலாமல் வாகனத்திற்குள் அடைபட்டுக்கிடந்த அந்தப் பெற்றோரின் மனம் அன்று என்ன பாடுபட்டிருக்கும்.

இந்த நிகழ்வு பேரா. பா. கல்யாணி (பிரபா. கல்விமணி), கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரத்தினம், ரவிகுமார் ஆகியோரின் கவனத்திற்கு வந்ததால் இருளர்கள் மீதான இந்த வன்கொடுமை வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதைப் பதிவு செய்ய வைத்துத் தொடர்ந்து மனித உரிமைக் களத்தில் நின்று அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து போராடியதன் விளைவாக இக்கொடுமை ஊடகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆறு போலீஸ்காரர்களுக்கும் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. விஜயாவிற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வழக்கினூடாக இருளர்களின் இயக்க வரலாற்றில் ஒரு பண்பு மாற்றம் நடை பெற்றது. முன்னதாக சுடரொளி சுந்தரம் முதலானோர் இருளர்களின் நலனுக்கான அமைப்புகளைச் செயல்படுத்தி வந்தனர். விஜயா வழக்கினூடாக இருளர்கள் மீதான இந்த வன்கொடுமைகள் காலங் காலமாகவும், ஏராளமாகவும் நடைபெற்று வருவதை அறிந்த பேராசிரியர் கல்யாணி “பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்” எனப் புதிய அமைப்பொன்றை உருவாக்கினார். சகோதரி லூசினா அவரது சபையின் அனுமதி பெற்று முழு நேர ஊழியராக வந்து பணியாற்றினார். பி.வி. ரமேஷ், கா தமிழ்வேங்கை, முருகப்பன், வழக்குரைஞர்கள் பவணந்தி, ராஜகணபதி, பூபால், தங்க. ரமேஷ் முதலான மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து கொண்டனர் சி.ஜெயபாலன், சு.ஆறுமுகம், மு.நாகராஜன், கோ.ஆதிமூலம், க.சிவகாமி, கி.சுகுணா முதலானோர் இருளர் சமூகத்திலிருந்தே உருவாகி இன்று அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

இயக்கமாக உருப்பெற்றுச் செயல்படத் தொடங்கிய பின்புதான் காவல்துறை வன்கொடுமைகளுக்கு அடுத்தபடியாக இருளர்கள் சந்திக்கும் இன்னொரு மிகப் பெரிய பிரச்சினை வருவாய்த்துறையிடமிருந்து உருவாவதை கல்யாணி முதலான முன்னோடிகள் உணர்ந்து கொண்டனர். பழங்குடியினருக்கான எந்த அரசுச் சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக உள்ள சாதிச் சான்றிதழ் இருளர்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளுடன். மிகக் கடுமையாகப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. திரு. ப.சிவகாமி அவர்கள் ஆதி திராவிடர் நலத் துறைச் செயலராக இருந்தபோது இச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒட்டு மொத்தமாகச் சில நூறு பேர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது ஒரு விதிவிலக்கு.

இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளைத் தொடங்கிய பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்திற்கு ஆங்காங்கு முறையான கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.. திண்டிவனத்தில் ஒரு அலுவலகமும் உண்டு. அவ்வப்போது மாநாடுகள் நடத்தப்பட்டுக் கோரிக்கைகள் முறைப்படுத்தப்படுகின்றன. கல்யாணி அவர்களின் வழிகாட்டலில் சங்கத்தின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு அவ்வப்போது சிறு வெளியீடுகளாகக் கொண்டுவரப் படுகின்றன.

இத்தனைக்கும் இடையில் காவல்துறை வன்முறைகளும், சாதிச் சான்றிதழ்கள் மறுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. 1993- 2009 காலகட்டத்தில் மட்டும் சங்கத்தின் மூலமாக அளிக்கப்பட்ட புகார்கள் 401. மோட்டார் மின்கம்பிகளைத் திருடியதாக 2007-2008 ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 5 இருளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்த ஆண்டில் (2011) மட்டும், இன்று நான்கு பெண்கள் வன்புணர்ச்சி செய்தது உட்பட இதுவரை நான்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

நவம்பர் 22, (2011), செவ்வாய்

திருக்கோவிலூரிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சங்கராபுரம் செல்லும் சாலையில் பெண்ணையாற்றைத் தாண்டியவுடன் அமைந்துள்ள கிராமம்தான் டி.கே மண்டபம். அவ்வூருக்குள் சுமார் ஒரு கி.மீ தொலைவில் ஆளரவமற்ற ஒரு காட்டுப்பகுதியில் மிக அழகான ஒரு இயற்கைச் சூழலில் பெண்ணையாற்றை ஒட்டி அமைந்துள்ளது ஒரு குன்று. குன்றின் கீழே உள்ள ஒரு கால்வாயில் வேகமாகப் பாய்கிற நீர் சற்றுத் தூரம் ஓடிப் பெண்ணையாற்றில் கலக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குன்றை உடைத்துப் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர். அப்போது வேலை செய்த தொழிலாளிகள் ஓய்வெடுப்பதற்கெனக் கல் மண்டபம் ஒன்று குன்றின்மேல் கட்டப்பட்டுள்ளது. இதனாலேயே ஊரின் பெயரும் மண்டபம் என்றாகியுள்ளது. கல் மண்டபத்திற்கும் பெண்ணையாற்றுக்கும் இடையில் ஒரு மதுரை வீரன் கோயில் உள்ளது. சென்ற டிசம்பர் 2ந் தேதியன்று இந்த நான்கு இருளர் பெண்கள் மீதான வன்முறை குறித்து அறிவதற்காக நாங்கள் நால்வரும் அங்கு சென்றபோது இந்தக் கொடுமை பற்றிய நினைவுச்சுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால் நிச்சயமாக அந்த அழகை ரொம்பவும் ரசித்திருப்போம். அந்த இடத்திலிருந்து எழுந்துவர மனமிருந்திருக்காது.

ஒரு மத்தியதர வர்க்கச் சுற்றுலா மனநிலையோடு இதை எழுதிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். சுற்றுலாவாக வந்து சில மணி நேரங்கள் இங்கே தங்கி, கொண்டு வந்த பொருட்களை உண்டு, பருகிச் செல்வதற்கு இது ஏற்ற இடந்தான். ஆனால் ஆள் அரவமோ, மின் வசதியோ இல்லாத இந்த வனச் சூழலில் நிரந்தரமாக வாழ்வது எத்தனை அச்சத்திற்குரிய ஒன்று. ஆனால் அந்த இரண்டு இருளர் குடும்பங்களும் மண்டபத்திற்கும் மதுரை வீரன் கோயிலுக்கும் இடையில் இரு சிறு ஓலைக் குடிசைகளை வனைந்துகொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து.கொண்டுள்ளன.

முதல் குடிசை முருகன் (55)- வள்ளி (50) தம்பதியருடையது. இவர்களுக்கு வெள்ளிக்கண்ணு (24), காசி (22), படையப்பா (12), மாணிக்கம் (10), ரங்கனாதன் (8) என்கிற மகன்களும், வைகேஸ்வரி (20), ராதிகா (17) என்கிற மகள்களும், ஆக ஏழு பிள்ளைகள். இவர்களோடு பெரியவர் முருகனின் தம்பி குமாரும் (45) திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். வெள்ளிக்கண்ணுக்கும் காசிக்கும் திருமணமாகிவிட்டது. இருவரும் இருளர்களின் தாய் வழிச் சமூக மரபுப்படி அவரவர் மனைவி வீட்டில் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கண்ணுவின் மனைவி கார்த்திகா (18) சென்னையிலுள்ள பனம்பாக்கத்தைச் செர்ந்தவர். அங்குள்ள செங்கற் சூளை ஒன்றில் வெள்ளிக்கண்ணு வேலை செய்கின்றார். காசியின் மனைவி லட்சுமி (20) உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர். காசி அங்குள்ள சூளை ஒன்றில் வேலை செய்கிறார். இருளர்கள் பெரும்பாலும் செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். பாரம்பரியத் தொழில்களான பாம்பு பிடித்தல், வேட்டை ஆடுதல் ஆகியவற்றைத் தொடர்பவர்களும் உண்டு. விதிவிலக்காக முருகன் வள்ளி தம்பதியினர் திருக்கோவிலூரில் ‘தட்டான் மண்’ சலிக்கின்றனர். அதாவது பொற்கொல்லர்கள் பணி செய்யும் பகுதிகளில் மணலைச் சலித்துத் தங்கத் துகள்களைப் பொறுக்கும் தொழில். தற்போது மழைக் காலமானதால் சூளை வேலை இல்லை. எனவே வெள்ளிக்கண்ணும் காசியும் தத்தம் மனைவிமாருடன் மண்டபத்திற்கு வந்துள்ளனர். இவர்களோடு சிறுவாலையைச் சேர்ந்த அவர்களின் உறவினர் ஏழுமலை (35) என்பவரும் விருந்தினராக வந்து தங்கியுள்ளார். ஆக அன்று அந்தக் குடிசையில் மட்டும் 11 பேர்கள். பக்கத்துக் குடிசையில் இன்னொரு குமார் (55), செல்வி (50) தம்பதியர் வசித்து வருகின்றனர்.

சம்பவ நாள் காலை அந்த இருளர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் விடிந்தது. பிள்ளைகள் மருமகள்கள் எல்லோரும் வந்துள்ள திருப்தியோடு முருகன் வள்ளி தம்பதியினர் மண் சலிக்கச் சென்றனர். வெள்ளிக்கண்ணுவும் ஏழுமலையும் மீன்பிடிக்கச் சென்றனர். இப்படி எல்லோரும் சென்றபின் வீட்டில் காசியும் பெண்களும் மட்டும் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூன்று போலீஸ்காரர்கள் ட்ரிபிள்ஸ் வந்துள்ளனர். முருகனின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த காசியைப் பிடித்து அடித்தனர். வீட்டில் இருந்த பெண்களை ஒரு நோட்டம் விட்டுவிட்டு முருகன் வந்தால் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிவிட்டுக் காசியை இழுத்துக் கொண்டு கிளம்பினர். காசியை பைக்கில் ஏற்றிவிட்டு ஒரு போலீஸ்காரர் நடந்து பின்னே சென்றார்.

தகவல் தெரிந்த முருகன், வள்ளி, குமார் ஏழுமலை, வெள்ளிக்கண்ணு ஆகிய ஐவரும் திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது காசி அங்கு இல்லை எனவும் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் பொய் சொல்லப்பட்டுள்ளது. திரும்பி அவர்கள் வீட்டிற்கு நடந்து வந்துள்ளனர். இதற்கிடையில் இரவு 8 மணி வாக்கில் ஒரு வாகனத்தில் 8 போலீஸ்காரர்கள் வந்துள்ளனர். கீழே வண்டியை நிறுத்திவிட்டு மெலே வந்தவர்கள் சட்டிபானைகளை உடைத்து, முருகன் வள்ளி தம்பதி தன் இரு மகள்களின் திருமணத்திற்கென ஆயுள் முழுவதும் உழைத்துச் சேமித்த 10 பவுன் நகைகளையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டனர். நான்கு செல் போன்கள், ஒரு சார்ஜர் ஆகியவற்றையும் கூட எடுத்துக் கொண்டனர். இருளர்களிடம் வேறு என்ன இருக்கிறதோ இல்லையோ செல்போன்கள் கட்டாயமாக இருக்கும் என்பார் கல்யாணி. குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வித வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் தொடர்பில் இருக்க செல்போன்கள் அவர்களுக்கு அத்தியாவசியமாகி விடுகின்றன.

லட்சுமி, கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு இளம் பெண்கள், படையப்பா, மாணிக்கம், ரங்கனாதன் ஆகிய மூன்று சிறுவர்கள், முருகனின் தம்பி குமார், பக்கத்துவீட்டுச் செல்வி ஆக 9 பேர்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். நான்கு போலீஸ்காரர்களும் ஏறிக்கொண்டனர். ஜீப் பெண்ணாற்றைக் கடந்து திருவண்ணாமலைச் சாலையில் விரைந்து திருக்கோவிலூருக்குச் சுமார் ஐந்து கி.மீ தொலைவில் சாலை ஓரமாக இருந்த ‘தைலா மரத் தோப்பின்’ பக்கம் திரும்பி நின்றது. தைலா மரத் தோப்பென்பது வேறொன்றுமில்லை. பெரிய காடு என்று நினைத்துக் கொண்டுதான் நாங்களும் அங்கே போனோம். போக்குவரத்து மிகுந்த அந்தச் சாலையில் சுமார் 100 மீ தொலைவிலிருந்த ஒரு சிறிய யூகலிப்டஸ் தோட்டம்தான் அது.

மண்டபத்தில் குடிசை அருகிலேயே நான்கு போலீஸ்காரர்களும் காத்திருந்தனர். முருகன், வெள்ளிக்கண்ணு, பக்கத்து வீட்டுக் குமார், விருந்தினர் ஏழுமலை, வள்ளி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரும்பியவுடன் ஆண்கள் நால்வரையும் போலீஸ்காரர்கள் லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். பின் ஐவரையும் ஒரு வேனில் ஏற்றி திருக்கோவிலூர் காவல் நிலயத்திற்குக் கொண்டு சென்றனர். நான்கு ஆண்களையும் லாக் அப் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு வள்ளியை மட்டும் புடவையை எல்லாம் அவிழ்த்துச் சோதனை இட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். ஒரு வெள்ளைத் தாளில் அவர் கைநாட்டும் பதிவு செய்யப்பட்டது. வெள்ளைத் தாளில் கைநாட்டு பெறுவதை மறுக்கிற தேர்வுச் சுதந்திரமோ இல்லை, என் பிள்ளைகளையும் மருமகள்களையும் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் உரிமையோ கேவலம் ஒரு இருளர் கிழவிக்கு உண்டா என்ன? “இந்த நாட்டிலேயே மிகப் பெரிய organised criminal gang எதுவென்றால் அது போலீஸ்காரர்கள்தான் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முல்லா அவர்கள் ஒரு தீர்ப்பில் பதிவு செய்துள்ளதுதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

பின்னர் மூன்று போலிசார் வள்ளியை மட்டும் வேனில் ஏற்றி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைக்குக் கொண்டு வந்தனர். தைலா மரத் தோப்பில் இருந்தவர்களும் போலீஸ் வாகனத்தில் அங்கு கொண்டு வரப்பட்டனர். இந்த வாகனத்தில் இருந்தவர்களில் குமாரைத் தவிர நான்கு இளம் பெண்களையும் சிறுவர்களையும் இறக்கி வேனில் ஏற்றினர். ஒரு போலீசும் இறங்கி வேனில் ஏறிக் கொண்டார். குமார் இருந்த வாகனம் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தது. பெண்களும் சிறுவர்களும் இருந்த வேன் ஏற்கனவே லொகேஷன் பார்த்து வைத்திருந்த தைலா மரத் தோப்பை நோக்கி நகர்ந்தது.

கவனியுங்கள். பொய் வழக்குப் பதிவு செய்து கணக்கு முடிப்பதற்குத் தகுதியான வயதுகளிலுள்ள ஆறு இருளர் இன ஆண்கள் (மாலையில் பிடித்துச் செல்லப்பட்ட காசி+ இரவில் வீட்டிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டு லாக் அப்பில் அடைக்கப்பட்ட நால்வர்+ இப்போது ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட குமார்= 6) போலீஸ் ஸ்டேஷனில்; காவல் துறையின் காம வெறிக்குத் தீனியாகக் கூடிய தகுதியுள்ள நான்கு இளம் பெண்களும் மற்றவர்களும் தைலா மரக் காட்டில்.

பயனற்ற சரக்குகளான மூன்று சிறுவர்கள் மற்றும் இரு முதிர்ந்த பெண்கள் இந்த ஐவரை மட்டும் வேனிலேயே இருக்க வைத்துவிட்டுஅதில் வந்த நான்கு போலீஸ்காரர்களும் இளம் பெண்களை மட்டும் வேனில் இருந்தவர்களின் கண் முன்னே கீழே இறக்கினர் . என்ன நடக்கப் போகிறது என ஒரு வேளை அந்தச் சிறுவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்களுக்கு என்ன நேரப் போகிறது போகிறது என வேனில் இருந்த முதிர்ந்த பெண்கள் இருவருக்கும் நிச்சயமாகத் தெரியும். நான்கு பெண்களில் இருவர் வள்ளியின் மகள்கள். மற்ற இருவர் அவரின் மருமக்கள். ஆனாலும் வள்ளியோ செல்வியோ அந்தக் கணத்தில் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வகையில் காம வெறிக்குப் பலியானவர்களின் துன்பத்தைக் காட்டிலும் இந்தத் துன்பம் கொடிது. இனி அந்தப் பெண்களில் ஒருவரான லட்சுமியின் சொற்களில்:

“ இரவு 12 மணி அளவில் என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா எங்க நாலு பேரையும் கீழே இறக்கி, வண்டியில் வந்த நாலு போலீசும் ஆளுக்கு ஒருத்தரா எங்களை தனித்தனி மறைவிடங்களுக்குத் தள்ளிப் போனாங்க. என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே தள்ளி என் சேலையை உருவி மார்பகங்களைக் கசக்கினார். ‘நான் மூணு மாசம் முழுகாமல் இருக்கேன்….என்ன உட்டுடுங்க அய்யா’ன்னு கெஞ்சியும் அவர் விடல. நான் கத்த முயன்றபோது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழிச்சார். இதேபோல கார்த்திகாவைத் தள்ளிச் சென்ற போலீசிடம் அவள், ‘என்னக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி நினைச்சு உட்டுடுங்க’ண்ணு சொல்லிக் காலில் விழுந்து கெஞ்சினாள். அவளையும் கீழ தள்ளிப் படுக்கவச்சு அவ தாலிக் கயிற்றை அறுத்து எறிஞ்சிட்டு அந்தப் போலீஸ் கற்பழிச்சார் (ஆகா, என்ன சென்டிமென்ட் பாருங்கள். தாலிக்குத்தான் நமது காவல் துறையினர் எத்தனை மதிப்பளிக்கிறார்கள் !). வைகேஸ்வரியை தள்ளிச் சென்ற போலீஸ் அவளை முழு நிர்வாணமாக்கி, மார்புல எட்டி உதச்சுக் கீழே தள்ளிக் கற்பழிச்சார். ராதிகாவை மட்டும் இந்த நாலு போலீசில் மூணு பேர் மாறி மாறிக் கற்பழிச்சாங்க. நாங்க சத்தம் போடாம இருக்குறதுக்காக எங்க வாயைப் பொத்தி அமுக்குனாங்க.”

நவம்பர் 23, புதன்

வேலை முடிந்த பின் நான்கு பெண்களும் இழுத்து வரப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார்கள். மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி லட்சுமியும் கார்த்திகாவும் அழுதுள்ளனர். இன்னொரு பக்கம் வைகேஸ்வரியும் ராதிகாவும் தேம்பி அழுதுள்ளனர். வள்ளி என்ன செய்வார் பாவம். மகள்களைச் சமாதானம் செய்வாரா இல்லை மருமகள்களுக்கு ஆறுதல் சொல்வாரா?

காலை சுமார் ஐந்து மணி அளவில் எல்லோரையும் மண்டபத்தருகே இறக்கி விட்டுவிட்டு போலீஸ் வேன் நழுவியது.

மற்றவர்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு முதிய பெண்கள் இருவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண்களின் நிலையை அறிய திருக்கோவிலூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். அங்கே அந்த ஆண்கள் அறுவரையும் ஒரு போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். விசாரித்தபோது விழுப்புரம் கொண்டு செல்வதாய்ச் சொன்னார்கள். பின்னர் வள்ளியும் செல்வியும் தங்களுக்குத் தெரிந்த பா.ம.க வழக்குரைஞர் வீர. செல்வராஜிடம் சென்று முறையிட்டுள்ளனர். அவர், “மேலிடத்தில் புகார் செய்யுங்கள்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் மதியத்தில் ஒரு போலீஸ் வாகனம் மண்டபத்தை நோக்கி வந்துள்ளது. பயந்துபோன பெண்களும் சிறுவர்களும் ஓடி அருகில் உள்ள புதர்க் காடுகளில் ஒளிந்துள்ளனர். குன்றின் மீது ஏறி வந்த போலீசார் குடிசைகளுக்குள் நுழைந்து அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை எல்லாம் மீண்டும் கலைத்துப் போட்டு நிர்தூளி செய்துவிட்டுப் போனார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதும் புகார்கள் செய்து விடக்கூடாது என்பதற்கான ஒரு மிரட்டல் நடவடிக்கையாக இது நடந்துள்ளது.

மாலையில் வீடு திரும்பிய வள்ளியும் செல்வியும் இதைக் கேள்விப்பட்டவுடன் இனி இங்கிருந்தால் பாதுகாப்பு கிடையாது எனச் சொல்லி எல்லோரையும் அழைத்துக்கொண்டு பகலில் சந்தித்த வழக்குரைஞர் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர் சாப்பிட 50 ரூபாய் பணம் கொடுத்து அன்றிரவு தங்கவும் அனுமதித்துள்ளார்.

நவம்பர் 24, வியாழன்

காலையில் வழக்குரைஞர் வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த ஒன்பது பேரும் (முதிய பெண்கள் இருவர்+ வன்புணர்ச்சிக்கு ஆளான நால்வர்+ சிறுவர் மூவர்) சந்தைப்பேட்டை கிளைச் சிறையில் தமது கணவன்மார்களும் உறவினர்களும் உள்ளனரா என்று பார்த்து, இல்லை எனத் தெரிந்தவுடன் புறப்பட்டு உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள லட்சுமியின் பெற்றோர்களிடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். லட்சுமியின் தந்தை கொளஞ்சி பழங்குடி இருளர் சங்கத்தின் உறுப்பினர். நடந்ததை அறிந்த அவர் கா.பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்க உறுப்பினர் திருமதி பூபதியிடம் அழைத்துச் சென்றார்.

நவம்பர் 25, வெள்ளி

இன்று மாலை பூபதி எல்லோரையும் இருளர் சங்கத்தின் விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷிடம் அழைத்துச் சென்றார். தகவலறிந்து பேராசிரியர் கல்யாணியும் சங்கப் பொருளாளர் நாகராஜனும் அங்கு வந்து சேர்ந்தனர். முதலில் புகார் எழுதுவதா இல்லை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதா என்கிற கேள்வி எழுந்த போது, முதலில் புகாரைப் பதிவு செய்வதுதான் முக்கியம் எனச் சொன்ன கல்யாணி, இரவு முழுவதும் அந்தப் பெண்களைத் துருவித் துருவி விசாரித்து, இடை இடையே அவர்களுக்குத் தைரியமும் ஊட்டி நடந்தது என்ன என்பதை முழுமையாகத் தொகுத்துள்ளார். இதுபோன்ற புகார்களை எழுதும்போது அது தேவையான எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாகவும், அதே நேரத்தில் சுருக்கமாகவும், முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருப்பார் கல்யாணி. எக்காரணம் கொண்டும் உண்மைகளை மிகைப்படுத்துவதோ பொய்களைச் சேர்ப்பதோ கூடாது, அப்படிச் செய்தால் அது புகாரைப் பலவீனப் படுத்திவிடும் என்று சொல்வார்.

நவம்பர் 26, சனி

காலையில் புகார் எழுதி முடிக்கப்பட்டது. தட்டச்சு செய்யத் தாமதமாகுமென்பதால் கையாலேயே எழுதி காலை 11 மணி அளவில் விழுப்புரம் காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குப் பாதிக்கப்பட்ட பெண்களுடன் எல்லோரும் சென்றனர். முன்னதாக டி.ஜி.பி திரு.ராமானுஜம் அவர்களுக்கு இந்தக் கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுருக்கமாகக் குறுஞ் செய்தி ஒன்றை கல்யாணி அனுப்பி வைத்திருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அலுவலகம் வந்த காவல் கண்காணிப்பாளர் நீ. பாஸ்கரன் ஐ.பி.எஸ் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதாகவும் வாக்களித்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களைத் தவிர மற்றவர்களைப் போகுமாறு கூறியுள்ளார். நல்ல வேளையாக நான்கு பெண்களும் இதுவரை குளிக்கவோ உடை மாற்றவோ இல்லை. அப்படிச் செய்திருந்தால் மருத்துவப் பரிசோதனை பயனில்லாமல் போயிருக்கும்.

நான்கு பேரும் தனி அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு மூடிய கதவிற்குள் மாலை மூன்று மணியிலிருந்து மறு நாள் காலை 8 மணி வரை ‘விசாரிக்கப்பட்டனர்’. வள்ளி, பூபதி, ரமேஷ், நாகராஜன் ஆகியோர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர். ஆய்வாளர் ரேவதி மற்றும் மல்லிகா, வசந்தா ஆகிய பெண் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் பெண்களை அச்சுறுத்தி மிரட்டியுள்ளனர். பொறுப்பு டி.ஐ.ஜி சக்திவேலின் கண்காணிப்பில் இது நடந்துள்ளது. மருத்துவப் பரிசோதனை என்றால் கால்களை அகல விரித்துப் பிடித்துக் கொண்டு பெண் உறுப்பில் டாக்டர்கள் கையை விட்டுத் துழாவுவார்கள் என்றெல்லாம் அவர்களிடம் சொல்லப்பட்டது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் கருத்தரிக்க்காமல் இருந்து, இன்று மூன்று மாதக் கருவைச் சுமந்துள்ள லட்சுமிக்கு அது கலைந்துவிடும் என்கிற அச்சம் ஊட்டப்பட்டது. “வன்புணர்ச்சிக் குற்றம் சாட்டப்பட்டால் அந்த நான்கு போலீசாரின் குடும்பங்களும் அழிந்து போய்விடும், அதனால் உங்களுக்கு என்ன பயன்? கற்பழிப்பதாகச் சொன்னது பொய் என நீங்கள் வாக்குமூலம் அளித்தால் கைது செய்துள்ள ஆறு பேர்களையும் விட்டுவிடுவோம். உங்களுக்கெல்லாம் தையல் மெஷின் வாங்கித் தருவோம்” என்றெல்லாம் கூறியுள்ளனர். விடியற்காலை 3 மணி அளவில் வள்ளி மட்டும் விசாரணை அறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 27, ஞாயிறு

காலை 6 மணி அளவில் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறைக்கு ரமேஷ் அழைக்கப்பட்டுள்ளார். உள்ளே பாஸ்கரனும் வேலூர் சரக டி.ஐ.ஜி சக்திவேலும் இருந்துள்ளனர். “ கைது செய்யப்பட்ட ஆறு பேர்களையும் விட்டுவிட வேண்டும் என்பதற்காக, தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகப் பொய் சொன்னோம் என்று எங்களிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த விஷயத்தை ‘டிராப்’ செய்துவிடுங்கள்” என்று சக்திவேல் கூறியுள்ளார். தொடர்ந்து “எஸ்.பி உங்களுக்கு வேண்டியதைச் செய்வார்” என்று கூறி முடித்துக் கொண்டார். .

பின்னர் பெண்கள் இருந்த அறைக்குள் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றிலும் பெண் போலீஸார் நின்றிருந்தனர். அந்தப் பெண்கள், “எங்களைக் கற்பழிக்கல. எங்கள் ஆட்களை விடணும்கிறதுக்காக நாங்கள்தான் பொய் சொன்னோம்” எனப் பயம் தொனிக்கச் சொல்லி, “சரிதானா?’ என்பதைப்போல பெண் போலீஸ்களைப் பார்த்துள்ளனர். அங்கு நின்றிருந்த வள்ளி அவர்களைப் பார்த்து, “போலீஸ்காரங்க உங்களை மிரட்டியதை ஐயா கிட்ட சொல்லுங்க” எனச் சொல்லியுள்ளார். பெண்கள் நால்வரும் மிரண்டு போய் மௌனமாக நின்றுள்ளனர். இது போன்ற ஒரு வாக்குமூலத்தை அந்தப் பெண்களிடம் பெற்று அதைப் பதிவு செய்துள்ளதும் அறிய வந்தது. இது குறித்துக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும் காலைப் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.

பின்னர் வள்ளியையும் நான்கு பெண்களையும் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து சிறிது நேரம் வைத்திருந்தபின் மதிய நேர வாக்கில் மண்டபத்திலுள்ள அவர்களது குடிசையருகில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த நிமிடம் வரை இருளர் சங்கப் பொறுப்பாளர்களிடம் வாக்களித்தது போல அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையில் உண்மைகளை மூடி மறைக்கக் காவல் துறை செய்கிற முயற்சிகள் குறித்து டி.ஜி.பிக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைத்தார் கல்யாணி.

கல்யாணியும் மற்றவர்களும் முதல் நாள் சென்று அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் பதிவு செய்த காவல் துறையினர், 26ந்தேதியிட்ட அந்த அறிக்கையுடன், ‘விசாரித்தபோது இது பொய் எனத் தெரிய வந்ததால் (mistake of fact) விசாரணை கைவிடப்படுவதாகக் (refer)’ குறிப்பிட்டு திருக்கோவிலூர் நீதித் துறை நடுவரிடம் இன்று தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் அதை உரிய நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

இது போன்ற பிரச்சினைகளில் நிர்வாக நடுவரின் (executive magistrate) விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவது வழக்கம். இத்தகைய விசாரணையை நீதிமன்ற நடுவர் ஒருவரே செய்ய வேண்டுமென தற்போது குற்ற நடவடிக்கைச் சட்டம் (176-1) திருத்தப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையைப் படித்த திருக்கோவிலூர் நீதித் துறை நடுவர் திரு. முரளீதர கண்ணன் அவர்கள் காவல் துறையின் இந்தத் தகிடுதத்தத்தை நம்பவில்லை. காவல் துறை விரும்பியதைப் போல இந்த வழக்கை ஊத்தி மூடிவிட அவர் தயாராக இல்லை. “ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை டி.எஸ்.பிதான் விசாரிக்க வேண்டும். அதெப்படி ஆய்வாளர் ஒருவர் இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளார்?” எனக் கேட்ட அவர், “நானே அவர்களிடம் நேரடியாக விசாரித்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி மாலை 6 மணி அளவில் மண்டபத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையைத் தொடங்கினார். இரவு 11 மணி வரை விசாரணை நடந்தது. மானுட மேன்மையின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழக் கூடிய இப்படியான அதிகாரிகளும் நீதியரசர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதித் துறை நடுவர் மட்டுமல்ல, ஊடகங்களும் கூட காவல் துறையின் இந்தப் பொய்களை நம்பத் தயாராக இல்லை. நடுவர் வருவதற்கு முன்னதாக அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பழங்குடி அமைப்பின் தலைவருமான திரு. நஞ்சப்பன் முதலானோரும் வந்து பாதிக்கப் பட்ட பெண்களைப் பார்த்து விசாரித்ததோடு ஆறுதலும் கூறினர். முந்திய நாள் இரவு நடந்த காவல் துறை மிரட்டல்களால் நிலை குலைந்திருந்த இப்பெண்கள் இந்த நிகழ்வுகளினூடாகத் தங்களைத் தேற்றிக் கொண்டனர். அஞ்சாமல் மீண்டும் உண்மைகளைச் சொல்லத் தொடங்கினர்.

ஒரு விறுவிறுப்பான திரைப்படம்போல வேகமாகக் காட்சிகள் மாறிக் கொண்டிருந்த இந் நிகழ்ச்சிப் போக்கில் இந்தக் கணத்தில் ஒரு புதிய நபர் தோன்றுகிறார். அவர் பெயர் தங்கமணி. ‘பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சி’ என்றொரு அமைப்பை நடத்திக் கொண்டிருப்பவர். சி.பி.எம் கட்சியுடன் நெருக்கமாக உள்ள இந்நபர் நீதித் துறை நடுவர் விசாரணையை முடித்துச் சென்ற கையோடு வள்ளியையும் நான்கு பெண்களையும் விழுப்புரம் அழைத்துச் சென்று, அவர்களைச் சி.பி.எம் அலுவலகத்தில் தங்க வைத்தார்.

வள்ளியின் குழந்தைகளும் பிறரும் அதே விழுப்புரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்தது நினைவிற்குரியது.

நவம்பர் 28, திங்கள்

காலை இதழ்கள் இது தொடர்பான இரு முக்கிய செய்திகளைக் கொண்டிருந்தன. டி.ஐ.ஜி சக்திவேல் தலைமையில் காவல் துறையினர் நான்கு பெண்களையும் மிரட்டிப் பொய் கூற வைத்தனர் எனப் பழங்குடி இருளர் பதுகாப்புச் சங்கம் வைத்த குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இன்னொருபக்கம் காசி, முருகன், குமார், வெள்ளிக்கண்ணு, ஏழுமலை, பக்கத்துக் குடிசை குமார் ஆகிய அறுவரும் விழுப்புரம் மேற்குக் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு நடந்த ஐந்து திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை கசியவிட்ட செய்தியும் வெளிவந்திருந்தது. “கடலூர் மத்திய சிறையில் நேற்று முன் தினம் (அதாவது 26ந் தேதி) அவசர அவசரமாக அடைக்கப்பட்டுள்ளனர்” என்பதாக தினகரன் நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 25ம் தேதி இரவு 11 மணி அளவில் இவர்கள் அறுவரும் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறித் தப்பிச் செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் தமிழ்மாறன் தலைமையிலான போலீஸார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அதில் கண்டிருந்தது.

“திருக்கோவிலூர் உட்கோட்டப் போலீஸார் விடுவித்த பிறகு காசி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக நடைமுறைக் கணக்குப்படி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” எனவும் தினகரன் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆறு பேரையும் மண்டபத்திலுள்ள இவர்களின் குடிசையில் வைத்து 22ந் தேதி கைது செய்து கொண்டு போனதை நாம் அறிவோம். 26ந் தேதிவரை இவர்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தலையிட்டு பிரச்சினை பெரிதான பின்பு இனியும் சட்ட விரோதக் காவலில் வைத்திருப்பது சிக்கலாகி விடும் என்கிற நிலை வந்த பின்னர் ‘அவசர அவசரமாக’ நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ரிமான்ட் செய்துள்ளனர். விழுப்புரம் சீனுவாசன் வீட்டில் 28.5 பவுன் நகை திருடப்பட்டது, ரவிக்கண்ணன் வீட்டில் ஒன்றே முக்கால் பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடியது, திருவாமூர் கோயில் உண்டியல் உடைப்பு, திருச்சி நெடுஞ்சாலையில் ஷோ ரூம் ஒன்றை உடைத்து செல்போன், காமெரா முதலான பொருட்களைத் திருடியது, நன்னாடு பெட்ரோல் பங்க்குக்கு முன் உள்ள வீடொன்றில் 13 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி திருடியது முதலான, போலீசால் இதுவரை கண்டு பிடிக்க முடியாத வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது போடப்பட்டுள்ளதும் அறிய வந்தது..

இன்று மீண்டும் விசாரணையை நீதிமன்றத்தில் வைத்துத் தொடர வேண்டும் என நீதியரசர் முரளீதரகண்ணன் அவர்கள் கூறியிருந்ததால் காலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சி.பி.எம் அலுவலகம் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களை அழைத்துச் சென்று திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அன்று விசாரணை முடிந்தவுடன் அப் பெண்கள் ரமேஷ் வீட்டிற்கு வந்து அங்கு ஏற்கனவே தங்கியிருந்த அவர்களின் உறவினர்களுடன் இணைந்து கொண்டனர்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் முயற்சியில் விழுப்புரத்தில் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், பழங்குடி அமைப்பினரும் கலந்துகொண்டனர். எங்கள் குழுவிலும் மூவர் பங்குபெற்றனர். சி.பி.ஐ விசாரணை, அடையாள அணிவகுப்பு நடத்தி வன்புணர்ச்சி செய்த போலீசாரைக் கைது செய்வது, வழக்கை ஊற்றி மூட முயற்சிக்கும் டி.ஐ.ஜி சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது, பொய் வழக்குப் போடப்பட்டவர்களை விடுதலை செய்வது முதலாக அன்று எடுக்கப்பட்ட தீர்மானகளுக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் அளித்துச் செய்திகள் வெளியிட்டன.

இதற்கிடையில் இன்று வழக்குரைஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான பொது நல வழக்கொன்றைத் தொடுத்தார். குற்றமிழைத்த போலீசார் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென அதில் கோரப்பட்டிருந்தது.

நிலைமை சிக்கலாவதை அறிந்து களத்திற்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி திரு ஷைலேந்திர பாபு சம்பவ நாளன்று பாதிக்கப்பட்ட பெண்களைக் கடத்திச் சென்ற ஐந்து காவல் துறையினரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.

நவம்பர் 29, செவ்வாய்

இன்று காலை இதழ்களில் வெளியான முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. பாதிக்கப்பட்ட நான்கு இருளர் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், 22அன்று இரவு அப்பெண்களை வேனில் கடத்திச் சென்று வைத்திருந்தது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமனாதன், தலமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் பக்தவத்சலம், கார்த்திகேயன் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் அவரது அறிக்கையில் கண்டிருந்தது. நீதித் துறை நடுவரது விசாரணை நடைபெறுவதாகவும் குற்றம் நிறுவப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று நீதித் துறை நடுவர் முன் நிறுத்தப்பட்டவுடன், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அவர் ஆணையிட்டர். சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் முடிந்து நீதித் துறையும் முதலமைச்சரும் தலையிட்ட பின்பு இன்று மதியம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். இத்தனை நாட்களுக்குப் பின் மேற்கொள்ளப் படும் பரிசோதனையில் ஏதும் பயனிருக்குமா?

நவம்பர் 30, புதன்

மருத்துவப் பரிசோதனை முடிந்து இன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் பெண்கள் நால்வரும் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர், அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது முன்குறிப்பிட்ட தங்கமணி தனது காரில் அவர்களை ஏற்றி மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குக் கடத்த முயன்றார். ஃப்ரன்ட்லைன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் திரு துரைராஜ் அவர்களுக்குச் சம்பவ இடங்களைச் சுற்றிக் காட்டும்பொருட்டு அங்கு வந்திருந்த பேரா. கல்யாணி, விருப்பத்திற்கு மாறாக ஏன் அவர்களைக் கடத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். “ இவ்வளவு நாள் எங்கே போனிர்கள்? அவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள். அவர்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வோம். சி.பி.எம் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப் போகிறோம்” என்று தங்கமணி சொல்லியுள்ளார். அங்கிருந்த அவர்களது தோழர்கள் “ஆமாம் அவங்க ஆட்களோட அவங்க போகட்டும். நீங்க தலையிட வேண்டாம்” எனப் பஞ்சாயத்துச் செய்துள்ளனர். அவர்கள் சி.பி.எம் கட்சிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டுமென கல்யாணி எங்களிடம் கூறினார். உடனடியாக அங்கு நின்றிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பன்னீர்செல்வத்திடம் கல்யாணி இது குறித்து முறையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அப்பெண்களிடம் தனித் தனியே இருமுறை விசாரித்தார். அவர்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் ரமேஷுடன்தான் போவோம்” என உறுதியாகக் கூறியுள்ளதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் அப்பெண்களை ரமேஷுடன் அனுப்பியுள்ளார்.

இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகக் காலையிலும், அவர்களின் மாதர் சங்கம் சார்பாக மாலையிலும் திருக்கோவிலூரில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

டிசம்பர் 01, வியாழன்

இன்றும் திருக்கோவிலூர் நீதித் துறை நடுவர் விசாரணையைத் தொடர்ந்தார். விசாரணை முடிந்தவுடன் மறுபடியும் தங்கமணி சுமார் 10 பேர்களுடன் வந்து கடத்த முயன்றுள்ளார். அங்கிருந்த சங்கப் பொறுப்பாளர்களான ரமேஷ், வீராசாமி, நாகராஜன், தமிழ் வேங்கை ஆகியோர் அம் முயற்சியை முறியடித்துள்ளனர்.

டிசம்பர் 02, வெள்ளி

இன்று காலை நாங்கள் திண்டிவனம் சென்று பேரா. கல்யாணி அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சம்பவங்களைக் கோர்வையாகச் சொன்னதோடு உரிய ஆவணங்கள் எல்லாவற்றையும் தந்துதவினார். பாதிக்கப்பட்ட பெண்களைத் தங்கமணி கடத்த முயன்றது தொடர்பாக காவல் துறை இயக்குனருக்குப் புகார் ஒன்றை இன்று அனுப்ப இருப்பதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்து நாங்கள் விழுப்புரம் வழியாகத் திருக்கோவிலூர் மண்டபம் சென்றோம். இருளர் குடிசைகளின் அருகில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பாக பாதிக்கப்பட்ட பெண்களை ஒவ்வொருவராக அழைத்து காவல் துறை அதிகாரிகள் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அவர்களைத் தொந்தரவு செய்யாவண்ணம் அருகே அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட பிற பெண்களையும், பி.வி.ரமேஷையும், அப் பெண்களின் வழக்குரைஞர் ஃப்ரீடாவையும் சந்தித்துப் பேசினோம்.

மாலையில் விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் பங்குபெற்றோம். பல்வேறு பழங்குடி அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு கூடியிருந்தனர். பழங்குடி மக்கள் முன்னணியின் நிறுவனர் திரு. சுடரொளி சுந்தரம் தலமை தாங்கினார். முந்தைய தீர்மானங்களை இக்கூட்டம் வலியுறுத்தியதோடு, இப்பிரச்சினை தொடர்பாகத் தமிழகம் முழுவதிலும் கண்டனக் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் முதலியவற்றை நடத்துவது எனவும் முடிவு செய்தது, தங்கமணியின் செயலைப் பலரும் கண்டித்தனர்.

டிசம்பர் 03, சனி

இன்றும் மண்டபத்தில் வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் அப் பெண்களிடம் காவல் துறையினரின் விசாரணை தொடர்ந்தது.

இன்று தங்கமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார், அதன் நகல்கள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளருக்கும், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளருக்கும் அனுப்பப்பட்டன. இதில் பத்தர் சாதியைச் சேர்ந்த ரமேஷும் கள்ளர் சாதியைச் சேர்ந்த கல்யாணி என்பவரும். முதலமைச்சர் 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்களைத் தம்முடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செய்ய முயன்றதாகவும் இதில் தலையிட்டபோது தம்மை அவர்கள் இருவரும் அடித்து உதைத்ததோடு “இருளர் தேவடியா மகனே” எனத் திட்டியதாகவும் புகார் கூறப் பட்டிருந்தது.

பழி தீர்க்கக் காத்துக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினர் இந்தப் புகாரின் அடிப்படையில் பேரா. கல்யாணி மற்றும் பி.வி.ரமேஷ் ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 294 பி, 323, 506(2) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 310 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

டிசம்பர் 05, திங்கள்

பழங்குடி இருளர் சங்கப் பொறுப்பாளர்களும் மக்கள் கண்காணிப்பகப் பொறுப்பாளர் ஆ. ஜெயராமனும் இன்று கடலூர் சிறைக்குச் சென்று காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு இருளர்களையும் சந்தித்த போது அங்கு அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துருந்தது. 4 நாட்கள் இவர்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட போது இவர்களோடு இன்னும் மூவரும் அங்கு கொண்டுவரப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் வன்புணர்ச்சி செய்யப்பட்ட கார்த்திகாவின் தந்தை முருகேசன். இவர் திருவள்ளூர் மாவட்டம் பனம்பாக்கத்தில் உள்ள அம்பாள் சேம்பரிலிருந்து போலீசாரால் கடத்தி வரப்பட்டுள்ளார். கடலூரில் பெண்ணை ஆற்றோரம் குடியிருக்கும் இவரின் உறவினர்களான முருகன் மற்றும் கோபால் ஆகியோரைத் தஞ்சாவூரில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த இடத்திலிருந்து இவ்வாறே அடுத்தடுத்த நாட்களில் கடத்திக் கொண்டு வந்துள்ளனர். விழுப்புரம் தாலுக்கா காவல் நிலயத்திலும், பின்னர் விழுப்புரம் லாட்ஜ் ஒன்றிலும் வைத்து இவர்கள் 9 பேர்களும் ம் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடம்பில் காயங்களுள்ளன. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தலையிட்டு நவம்பர் 26ல் புகாரளித்து, பிரச்சினை ஊடகக் கவனம் பெற்ற பின்னரே தினகரன் இதழ் எழுதியதைப் போல ‘அவசர அவசரமாக’ இவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பொறுப்பு டி.ஐ.ஜியாகப் பதவி வகித்து வந்த சக்திவேல் அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவரிடத்தில் திரு. பொன். மாணிக்கவேல் டி ஐ.ஜியாக நியமிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று விழுப்புரத்தில் கூடிய பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் செயற்குழு, பழைய கோரிக்கைகளோடு கல்யாணி, ரமேஷ் ஆகியோர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எல்லவற்றையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் சேர்த்து வலியுறுத்தி டி.ஜி.பியையும், சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் 9 பேர்களையும் விடுதலை செய்யக் கோரி புதிய டி.அய்.ஜி மாணிக்கவேல் அவர்களையும் சந்திப்பது எனவும் முடிவெடுத்தது.

டிசம்பர் 9, வெள்ளி

ஆங்காங்கு பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டங்கள் முதலியன நடைபெற்றன. டி ஐ ஜி உட்பட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொய் வழக்கு போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பன முக்கிய கோரிக்கைகள். காவல் துறை சும்மா இருக்குமா? இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம், காவல் துறையினரின் குடும்பத்தினர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற சீருடைப் பணியாளர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை நடத்தின. கல்யாணி, ரமேஷ் ஆகியோர் ஒழிக என அதில் முழக்கம் எழுப்பப்பட்டது.

டிசம்பர் 13, செவ்வாய்

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட உண்ணா விரதப் போராட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவருமான திரு. ந. நஞ்சப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 20, செவ்வாய்

இன்று நாங்களும் பேரா. கல்யாணி, சுடரொளி சுந்தரம், இருளர் சங்கத் தலைவர் ஜெயபாலன் ஆகியோரும் டி.ஜி.பி ராமானுஜம் அவர்களைச் சந்தித்த போது, அவர் பழங்குடியினர் பிரச்சினைகளில் தலையிடும்போது இனி காவல் துறை கவனமாக இருக்கும் என்றார். எனினும் காவல் துறையினர் கணக்கு முடிப்பதற்கெனப் பொய் வழக்குப் போடுவதில்லை என அவர் உறுதிபடக் கூறியதும், பாதிக்கப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டில் ஐயம் இருந்ததாலேயே அன்று இரவு அவர்களை விசாரிக்க நேர்ந்தது எனக் கூறியதும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும் குற்றமிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சிறையிலுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வது முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம்.

எமது பார்வைகள்:

1. இந்தப் பிரச்சினையைப் பொருத்த மட்டில் காவல் துறையினர் மூன்று குற்றங்களைப் புரிந்துள்ளனர். (i) பெண் காவலர்கள் யாருமின்றி பெண்களை இரவு நேரத்தில் வன்முறையாகக் கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்தது. (ii) கண்டு பிடிக்க இயலாத குற்றங்களைக் கண்டு பிடித்து விட்டதாகக் கணக்கு முடிப்பதற்கென 9 அப்பாவி இருளர்களைக் கடத்திச் சென்று, அவர்களை சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்தது; இவர்களைப் பிடித்துச் செல்லும்போது வீட்டில் இருந்த நகைகள், பணம், செல்போன்கள் முதலியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றது. (iii) கீழ்மட்டக் காவல் துறையினர் செய்த மிகக் கடுமையான குற்றங்களை மூடி மறைக்க மேல் மட்ட அதிகாரிகள் முயற்சி செய்தது; புகாரின் அடிப்படையில் பாதிக்கப் பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் சுமார் 16 மணி நேரம் அவர்களைத் தூங்க விடாமல் மிரட்டி கட்டாயமாக அவர்களிடம் பொய் வாக்குமூலம் ஒன்றைப் பெற்று, அதை ஊடகங்களில் வெளியிட்டதோடு “mistake of fact” என்பதாக வழக்கை முடிக்க முயற்சித்தது.

இந்தக் குற்றங்கள் மூன்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருபவை. முதலிரண்டு குற்றங்களும் கைது செய்வது தொடர்பான உச்ச நீதி மன்றம் டி.கே. பாசு வழக்கில் வழங்கியுள்ள நெறிமுறைகளை அப்பட்டமாக மீறியவை. முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியும், Political Violence and the Police in India (Sage Publications, 2007) என்னும் மிக முக்கியமான நூலின் ஆசிரியருமான டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் தனது நூலில் இந்தியக் காவல் துறையினர் வழக்கமாக நீதியை முறியடிக்கும் முயற்சிகள் குறித்து இட்டுள்ள பட்டியலில் உள்ளவற்றிற்குச் சான்றாக அமைபவை.

கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்கிற நிலையிலிருந்து பழங்குடி இருளர்களை இருளர் அமைப்புகள் சமீப காலங்களில் மீட்டுள்ளன. எனினும் இவர்களைக் குற்றப் பரம்பரையினராகவே அணுகுகிற போக்கைக் காவல் துறை தொடர்ந்து கடை பிடித்து வருகிறது. கீழ் மட்டக் காவல் துறையினர் மட்டுமின்றி மேல் மட்ட அதிகாரிகளும், பெண் காவலர்களும் கூட இத்தகைய மனநிலையையே கொண்டிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு வருகிற மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களில் 60 சதத்திற்கும் மேற்பட்டவை காவல் துறையினரின் அத்து மீறல்கள்தான் என்கிறார் இது குறித்து ஆய்ந்துள்ள ஜெயதிலக் குஹபா ராய் (Human Rights for the 21st Century, IIPA, 2004).

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனகம் வெளியிடப்பட்ட பின் உருவாக்கப் பட்ட நமது அரசியல் சட்டம் டாக்டர் அம்பேத்கர் முதலானோரின் முயற்சியால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால் நமது குற்ற நடைமுறைச் சட்டங்களும் இந்தியப் போலீஸ் சட்டமும் (1861) பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் உருவாக்கப் பட்டவை. சுதந்திர இந்தியா இதனை அப்படியே ஏர்றுக் கொண்டது. நமது அரசியல் சட்டத்தின் தொனிக்கோ, ஒரு ஜனநாயக ஆளுகைக்கோ முற்றிலும் பொருத்தமற்றவையாக இவை உள்ளன. காவல் துறைச் சீர்திருத்தம் குறித்து இங்கு 1885 முதல் பேசப்பட்டு வருகிறது. எனினும் இன்று வரை இந்தத் திசையில் எதுவும் நகர்ந்ததில்லை. இது தொடர்பாகத் தேசிய காவல் துறை ஆணையம் எட்டு தொகுதிகளில் அளித்த அறிக்கையும், எல்.பி.சிங் குழுவின் அறிக்கையும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

உடனடியாக இங்கு காவல் துறை, உளவுத் துறை மற்றும் குற்ற நடைமுறைச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் அவசியம். உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்டக் காவல் துறையினர் வரை எல்லோருக்கும் இது தொடர்பான உணர்வூட்டும் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பெண்ணுரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும். டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த நெறிமுறைகளை வெறுமனே காவல் நிலையங்களில் ஒட்டி வைத்தால் மட்டும் போதாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கைது தொடர்பான நெறிமுறைகள் ஆகியவற்றை மீறும் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும்.

இவ்வழக்கைப் பொருத்த மட்டில் தற்போது தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அய்ந்து காவல் துறையினர் தவிர, 9 பேர்களைச் சட்ட விரோதமாக நான்கு நாட்கள் காவலில் வைத்திருந்தது, சித்திரவதை செய்தது, பொய் வழக்குப் போட்டது, வீட்டிலும் பிற இடங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை கடலூர் பேருந்து நிலையத்தில் கைது செய்ததாக நீதிமன்றத்தில் பொய் கூறியது ஆகிய குற்றங்களுக்குக்குக் காரணமான ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் காவலர்கள், நான்கு பெண்களையும் மிரட்டி, தாங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க்கப் பட்டதை மறுத்துரைக்க வைத்த டி.ஐ.ஜி சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளர் ரேவதி, பெண் காவலர்கள் மல்லிகா, வசந்தா ஆகிய அனைவர்மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4 உட்படப் பொருத்தமான இதர சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும்.

2. தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அளித்ததோடு, காவலர்கள் மீது குற்றம் நிறுவப் பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது. எனினும் முதல்வர் அவர்களின் கவனத்திற்குச் சில செய்திகள் : புகழேந்தி தொடுத்த பொதுநல வழக்கை விசாரிக்கையில் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் குறிப்பிட்டதுபோல “இழப்பீடு வழங்குவது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்டி விடாது. வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….காவல் நிலையத்திற்கு ஒரு பெண் சென்று ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, அவர் தன்னை வன்புணர்ச்சி செய்தார் எனச் சொன்னால், அவரை உடனடியாகக் கைது செய்வதற்கு அங்குள்ள போலீஸ் அதிகாரி தயங்குவதில்லை. அப்படியுள்ளபோது ஏன் சாதாரண மனிதன் மீது செயல்படுத்தப்படும் ஒரு சட்டம் போலீஸ்காரர்கள் மீது செயல்படுத்தப் படுவதில்லை?” நவம்பர் 28 அன்று தலைமை நீதிபதி உங்கள் அரசை நோக்கி வைத்த கேள்வி இது. ஆனால் இன்று வரையிலும் அடையாள அணிவகுப்பு நடத்தவோ, இல்லை யாரையும் கைது செய்யவோ இல்லை.

அடுத்த சில நாட்களில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி அவர்கள், இவ்வழக்கைப் பற்றிச் சொல்லி காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு sovereign immunity கிடையாது என்பதச் சுட்டிக் காட்டவும் செய்தார். அதாவது கவர்னர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் அத்தகைய பதவியில் இருப்பதாலேயே சட்ட நடவடிக்கைகட்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப் படுவர். அத்தகைய தண்டனை விலக்கு எதுவும் போலீஸ்காரர்களுக்குக் கிடையாது. ஆனாலும் உங்கள் அரசு இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. ஒன்பது பேர்கள் பல நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். 26ந் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அளித்த புகாரில் இவர்களில் அறுவர் திருக்கோவிலூர் காவலர்களால் 22 அன்று கடத்தப்பட்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரை மறுக்காமல் காவல் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. சட்ட விரோதக் காவலில் அவர்கள் 4 நாட்கள் வைக்கப்பட்டுள்ளதை காவல்துறை ஏற்றுக் கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. எனினும் ஆய்வாளர் தமிழ் மாறன் தலைமையிலான காவற்படையினர் மீதும் இதுவரை நடவடிக்கையில்லை.

பாதிக்கப்பட்ட பெண்களக் கட்டாயப்படுத்திப் பொய் வாக்குமூலம் அளிக்கச் செய்த டிஐ.ஜி.சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் மீதும் நடவடிக்கையில்லை.

குற்றமிழைத்துள்ள அதிகாரிகளையும் காவலர்களையும் அரசும் காவல் துறையும் காப்பாற்ற முயற்சிக்கின்றன என்கிற நியாயமான அய்யத்தை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இது ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டுமென்கிற அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

எனவே இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.அய் விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஆணையிட வேண்டும். பேரா.கல்யாணி, பி.வி. ரமேஷ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கு, கல்யாணி கொடுத்துள்ள புகார் ஆகியவற்றையும் மற்றவற்றுடன் இணைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

3. முதல்வர் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள்: இந்தக் கொடுமை நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் உயரதிகாரிகளின் மாநாடொன்றில் உங்கள் ஆட்சியில் காவல்துறை முழுச் சுதந்திரத்துடன் செயல்படலாம் எனக் கூறினீர்கள். வெளிப் படைஎடுப்புகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் இராணுவத்துடன் ஒப்பிட்டு “உள் ஆபத்துக்களை எதிர் கொள்பவர்கள் காவல்துறையினர்” எனச் சொன்னீர்கள். போலீஸ்காரர்கள் மட்டும் பொருட்களை விலை குறைவாகப் பெறும் போலீஸ் கான்டீன்கள் திறக்கப்படும் எனவும் கூறினீர்கள். காவல் துறை மட்டுமின்றி எல்லா அரசுத் துறைகளுமே சுதந்திரமாகச் செயல்பட வேண்டியவைதான். அப்படியின்றி காவல் துறைக்கு மட்டும் இப்படியான சிறப்பு அறிவிப்புகளை நீங்கள் செய்யும்போது, அதை அவர்கள் அத்து மீறுகிற உரிமை (sovereign immunity) அளிக்கப்பட்டதாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாகவே உங்கள் ஆட்சி ஒரு போலீஸ் ஆட்சியாகவே இருக்கும் என்றொரு கருத்து மக்கள் மத்தியில் உள்ளது என்பதையும் நீங்கள் மறந்துவிடலாகாது. எனவே இப்படியான அறிவிப்புகளைச் செய்வதைத் தாங்கள் தவிர்க்க வேண்டும்.

4. பாதிக்கப்பட்ட பெண்கள் நால்வரையும் கடத்த முற்பட்டது குறித்து தங்கமணி மீது பேரா. கல்யாணி டிசம்பர் 2ந் தேதி அளித்த புகார்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத காவல்துறை, கல்யாணி மற்றும் பி.வி.ரமேஷ் ஆகியோர் மீது தங்கமணி அளித்த பொய்ப் புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. முன் குறிப்பிட்டவாறு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உட்பட பிணையில் வர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது

தகவல் அறிந்த நாங்கள் இது குறித்துக் கல்யாணியுடன் தொடர்பு கொண்ட பொழுது அவர், “இதைப் பெரிது படுத்தினால் நான்கு இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை உட்பட இதர பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படும். சற்றுப் பொறுமையாக இருப்போம்” என்றார். தவிரவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பிரயோகப் படுத்தப்படுதல் குறித்த பொய்ப் பிரச்சாரத்திற்குத் துணை போவதாகவும் ஆகிவிடும் என்பதால் இதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் பெறும் உரிமை கிடையாது. ஆனாலும் இவ்வழக்குகளில் மறைமுகமாக உயர் நீதி மன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெறப்படுகிறது. இந்த நடைமுறையை நாங்கள் எதிர்த்து வருவதால் அந்த முயற்சியிலும் இறங்கவில்லை.

பிற கோரிக்கைகளோடு இது குறித்தும் ஒரு கோரிக்கையைப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு இப்போது இணைத்துள்ளது. கல்யாணி மீது புகார் பதிவு செய்யப் பட்டுள்ளதைப் போலவே கல்யாணி கொடுத்த புகார் மீதும் வழக்கைப் பதிவு செய்து பிற வழக்குகளொடு இணைத்து சி.பி.ஐ விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதே அது. அதற்குமேல் இப்பிரச்சினைக்கு கூடுதல் முக்கியத்துவம் தவிர்க்கப்பட்டது

இது குறித்துப் பேசும்போது தவிர்க்க இயலாமல் விழுப்புரம் சி.பி.எம் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்களை தங்கமணி கடத்தியது குறித்தும் சொல்ல நேரிடுகிறது. தேவையில்லாமலும் உள் நோக்கத்துடனும் மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர் இழுக்கப் படுவதாக அவர்கள் தரப்பில் ஒரு வருத்தம் இருப்பதை அறிந்த நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பழங்குடியினருக்கான அமைப்பான மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் தோழர் பெ. சண்முகம் அவர்களை நவம்பர் 20 அன்று தொடர்பு கொண்டோம். அவர் விரிவாக விளக்கமளித்தார். தங்கமணிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், ஒரு நாள் இரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் வந்த அவர் தங்குவதற்கு இடமில்லை என்றதால் தங்கள் அலுவலகத்தில் தங்க அனுமதித்ததகவும் கூறினார். அடுத்த முறை அவர் நீதிமன்ற வாசலில் பிரச்சினை செய்த பொழுது அங்கே சில மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் இருந்தது உண்மைதான், ஆனால் இந்தப் பிரச்சினை முடிந்த பின்பே அவர்கள் அங்கு சென்றனர் என்றார். எப்படியும் உங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு நாள் அவர்களைக் கொண்டு வந்து தங்க வைத்துள்ளார். அடுத்த முறையும் உங்கள் அலுவலகத்திற்குத்தான் கொண்டு செல்வதாகச் சொல்லி வம்பு செய்துள்ளனர். காலமெல்லாம் வன்கொடுமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் போராடிவரும் கல்யாணி மீதே அச் சட்டப் பிரிவின் கீழ் இன்று அவர் புகார் கொடுத்துள்ளார். கல்யாணியும் ரமேஷும் கைது செய்யப்படக் கூடிய சூழலும் உள்ளது. நீங்கள் இதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்கிறீர்கள், ஏன் நீங்கள் தங்கமணிக்கும் உங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெளிப்படையாகச் சொல்லக் கூடாது எனக் கேட்டோம். எங்களிடம் அப்படியான புகார் எதுவும் கல்யாணியிடமிருந்து எழுத்து மூலமாக வராதபோது எப்படி நாங்கள் விளக்கமளிக்க முடியும் என ஒரு அரசு அதிகாரிபோல சண்முகம் வினவினார்.

தங்கமணிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தோழர் சண்முகம் குறிப்பிடுகிறார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆனந்தனோ தங்கமணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் இப்பிரச்சினையில் இணைந்தே செயல்பட்டதாகக் கூறுகிறார். திருக்கோவிலூர் இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ‘மக்கள் கண்காணிப்பகம்’ வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கையில் ஆனந்தன், அவ்வமைப்பின் மண்டலப் பொறுப்பாளர் ஜெயராமனிடம் கூறியவை பதிவு செய்யப் பட்டுள்ளன. அதிலிருந்து சில வரிகள் :

“ நவம்பர் 27ந் தேதி வந்த தங்கமணி இந்தப் பிரச்சினையைத் தமிழக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார். அன்று இரவு பாதிப்படைந்த பெண்களை எங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தங்கவைத்தார்…. எங்கள் கட்சியின் செயல்பாட்டின் விளைவாகத்தான் அந்தப் பெண்களுக்கு இழப்பீடு கிடைத்தது. காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பேரா.கல்யாணி போன்றவர்கள் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றிருந்தால் தமிழக அரசு செவி சாய்த்திருக்காது……இருளர் அமைப்பு நடத்தி வந்த தங்கமணி ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் இணைந்து செயல்பட்டார். பேரா. கல்யாணி பாதிப்படைந்த பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல் மெத்தனமாக இருந்து வந்தார். இதை ஆரம்பத்திலிருந்தே தங்கமணி கவனித்து வந்தார். நாங்கள் பாதிப்படைந்த பெண்களுக்கு ஆதரவாக டிசம்பர் 30 அன்று திருக்கோவிலூரில் நடத்திய ஆர்பாட்டத்தில் நிறைய இருளர் சமூக்த்தினருடன் தங்கமணி பங்கேற்றார். கல்யாணி மீதும் ரமேஷ் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கமணி புகார் கொடுத்துள்ளதாகக் கேள்விப் பட்டோம். அவரே கொடுத்தாரா, காவல் துறையின் தூண்டுதலால் கொடுத்தரா என்று எங்களுக்குத் தெரியாது”

இந்தக் கூற்றைக் கவனமாக வாசிப்பவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தங்கமணிக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். கல்யாணி மீது இப்படியான ஒரு புகார் கொடுக்கப்பட்ட பின்பு அளிக்கப்பட்ட கூற்று இது என்பது குறிப்பிடத் தக்கது. கல்யாணி மெத்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டும் ஆனந்தன் தங்கமணியின் அக்கறையைப் பாராட்டுகிறார். ஆரம்பத்திலிருந்தே தங்கமணியுடன் இணைந்து செயல்பட்டதாகப் பெருமையுடன் கூறும் ஆனந்தன், அவர் கல்யாணி மீது கொடுத்த புகார் குறித்து மட்டும் தனக்குத் தெரியாது என்று கைவிரிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரொம்பத் தாமதமாகவேனும் இடதுசாரிகள் தீண்டாமை மற்றும் பழங்குடியினர் பிரச்சினைகளையெல்லாம் கையிலெடுத்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் நாங்கள். ஆர்வமுடன் கவனித்து வருவது மட்டுமின்றி சாத்தியமான சந்தர்ப்பங்களில் இணைந்தும் செயல்பட்டுள்ளோம். எங்களது கட்டுரைகளிலும் அறிக்கைகளிலும் பாராட்டியுமுள்ளோம்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைகளில் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுயேச்சையான அமைப்புகளும் கட்சிகளும் உருவாகிச் செயல்டுகின்றன. உங்களைப் போன்றவர்களும் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். எங்களைப் போன்ற சிறிய அமைப்புகளும் பங்களிப்பைச் செய்து வருகிறோம். பலரும் செயல்பட்டு வருகிற களத்தில் நாமும் ஒருவர் என்கிற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவது முக்கியம். நாமே எல்லாம் எனச் செயல்படுவதற்கு இது காலமில்லை. உத்தபுரம், வாச்சாத்தி, சமச்சீர்க் கல்வி முதலான பிரச்சினைகளில் உங்கள் அமைப்பினர் பேசிய பேசுக்களையும் எழுதியுள்ள கட்டுரைகளையும் வாசித்தீர்களானால், நாங்களே எல்லாம் என்கிற தொனி ஆபாசம் என்கிற எல்லையைத் தொடும் அளவிற்கு அவற்றில் அமைந்துள்ளதை உணர முடியும். இது பிறரிடமிருந்து மட்டுமல்ல மக்களிடமிருந்தும் உங்களை அந்நியப்படுதிவிடும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கி முழு நேரமாகப் போராடி வரும் நாடறிந்த ஒரு போராளியை மெத்தனமாக இருந்தார் எனவும், எங்களால்தான் எல்லாம் நடந்ததெனவும் சொல்வதெல்லாம் என்ன நியாயம். வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்ப் பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் பக்கபலமாக இருப்பது மக்கள் கண்களில் படாமல் போய்விடாது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்..

5. இப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததிலும், குற்றத்தை மறைக்க காவல் துறை அதிகாரிகள் சிலர் செய்த சதிகளை முறியடித்ததிலும் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளுக்கு எங்கள் பாராட்டுக்கள். பெரிய அளவில் ஊடகப் பெருக்கம் நடந்துள்ள நிலையில் உண்மைகளை அவ்வளவு எளிதாக மறைத்துவிட இயலாது என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் உணர்வது நல்லது.

6. வை.கோ, விஜயகாந்த் ஆகியோர் இது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இடதுசாரிக் கட்சிகளும் குறிப்பிடத்தக்க பங்காற்றின. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் ம்தலான பிற அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இப்பிரச்சினையைக் கண்டு கொள்ளாதது கவனத்திற்குரியது.

7. இப்பிரச்சினையை ஒட்டிப் பல்வேறு இருளர் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.