பழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக பழங்குயின மக்கள் 24 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இம்மக்கள் குடியிருப்பதற்கான ஆதாரங்களாக ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு என அனைத்தும் வைத்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நில அளவைத் துறை இயக்குநர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன இடத்தை நில அளவைத் துறைக்கு மாற்றம் செய்ய கேட்டுள்ளார். இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இதில் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்புகார் மனுவை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 13.11.2019 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் புகார் மனுவினை அனுப்பி வைத்து அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதனைப் புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டுமென புதுச்சேரி அரசின் நில அளவைத் துறைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.