உழவர்கரை நகராட்சி உரிமம் பெற்று கடை நடத்த கெடுபிடி செய்வதைக் கைவிட வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (21.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

உழவர்கரை நகராட்சி உரிமம் பெற்று தான் கடை திறக்க வேண்டுமென சிறு வணிகர்களைச் மிரட்டிக் கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும் என சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்குப் பொது முடக்கத்தால் அனைத்து வணிகர்களும் கடைகளை மூடினர்.

இதனால், அனைத்து வணிகர்களும் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். தாங்கள் வாங்கிய தினத் தண்டல், வங்கிக் கடன், வணிகக் கடன் போன்றவைகளை அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி உழவர்கரை நகராட்சி தனது எல்லைக்குள் இயங்கும் கடைகளின் வணிகர்களையும் குறிப்பாக சிறுகடை வணிகர்களையும் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி உரிமம் பெற்றுதான் கடை திறக்க வேண்டுமென நெருக்கடி கொடுத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதனால், சிறு கடை வணிகர்கள் செய்வதறியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறு கடை வணிகர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கடை வைத்து இருந்தனரோ, அன்று முதல் இன்று வரை அபராதத்துடன் தொகை செலுத்தி உரிமம் பெற வேண்டுமெனவும் உழவர்கரை நகராட்சி நெருக்கடி தருகிறது.

மேலும், வணிகர்கள் மற்றும் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலுக்கு உரிமம் பெறுவதைக் கால நீட்டிப்பு செய்து, ஒரு முறை கட்டணம் என்ற இலகுவான முறையில் வசூலிக்க வேண்டும் என உழவர்கரை நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்.

ஊரடங்கு மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வருவாயை இழந்துள்ள வணிகர்கள் மற்றும் சிறுகடை வியாபாரிகளை கசக்கிப் பிழியும் உழவர்கரை நகராட்சியைக் கண்டித்து வணிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என அரசுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை செய்கிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.