கொரோனா அதிவேகமாகப் பரவல்: சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பைக் கைவிட வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (13.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால் சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பைக் கைவிடுமாறு புதுச்சேரி அரசை சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் தற்போது கொரோனோ தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 1123 பேருக்குக் கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டதில் 481 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 9 பேர் இறந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 15 அன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு நடத்துவது சரியானதல்ல.

மேலும், காவல்துறையினரின் அணிவகுப்பு சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறும் என்பதால் அணிவகுப்பில் பங்கேற்கும் காவலர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

புதுச்சேரியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொரோனா தொற்று பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாட்டுடன் சுதந்திர தின விழாவைக் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது.

எனவே, சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பைக் கைவிட துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.