ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடிய புதுச்சேரி அரசுக்குக் கண்டனம்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (17.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியின் நூறாண்டுக் கால ஏ.எப்.டி. ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடியதற்குச் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திலும், ஆசியக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை வென்றெடுத்த ரோடியர் பஞ்சாலையைப் புதுச்சேரி அரசு நிரந்தரமாக மூடியுள்ளது. இச்செயல் இந்த மண்ணின் சொந்த அடையாளத்தைப் புதைகுழியில் தள்ளி மூடு விழா நடத்தி விட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் அரசும், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசுகளும் ரோடியர் பஞ்சாலையைப் பாதுகாக்கத் தவறியதுடன், ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் இன்று மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேசிய பஞ்சாலைக் கழகத்திடம் இருந்து சிறப்பு நிதிப் பெற்று ரோடியர், சுதேசி, பாரதி ஆகிய பஞ்சாலைகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோடியர் பஞ்சாலையை மூடியதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் அழித்துள்ள ஆட்சியாளர்களைப் புதுச்சேரி மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

முதல்வர் நாராயணசாமி தேர்தல் நேரத்தில் ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகளை இணைத்து ஜவுளிப் பூங்கா உருவாக்கப்படும் எனவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனால், மேற்கண்ட வாக்குறுதியை மறந்து ஆலையை திறக்காமல் நிரந்தரமாக மூடியது புதுச்சேரிக்கும், மாநில மக்களுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

எனவே, தேசிய பஞ்சாலைக் கழகத்திடம் இருந்து, அவசர தொகுப்பு நிதி பெற்று ரோடியர் பஞ்சாலையை மீண்டும் முழுவீச்சில் இயக்க நடவடிக்கை எடுக்க சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.