புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு: முழு ஊரடங்கைச் செயல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் கூடுதலாகி உள்ளது. இதனால், கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் ஆபத்துள்ளது. புதுச்சேரி அரசோ அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக் கிட், போதிய படுக்கை வசதி இல்லாமல் தவிக்கிறது. கோரோனா பரவலைத் தடுப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். அதற்கு முன்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்தி இன்று (21.08.2020) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமைத் தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், இராவணன் பகுத்தறிவு இயக்க தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், தன்னுரிமைக் கழக தலைவர் தூ.சடகோபன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பெ.ரகுபதி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், இயற்கை மற்றும் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின், சிந்தனையாளர்கள் பேரவைத் தலைவர் கோ.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் புதுச்சேரி அரசு கோரிகைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.