மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.12.2025) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் போலி மாத்திரைகள் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.
புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. போலி மாத்திரைகள் தயாரித்த தொழிற்சாலைகள், குடோன்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டறிந்து சீல் வைத்தனர். இத்தொழிற்சாலைகளின் உரிமையாளர் ராஜா உட்பட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலி மாத்திரைகள் 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதன் பின்னணியில் பல ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளதையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர்.
போலி மாத்திரைகள் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில், போலி மாத்திரைகள் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற துணைநிலை ஆளுநர் திரு. கே.கைலாஷ்நாதன் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார். இதனை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.
மேலும், போலி மாத்திரைகள் வழக்கைக் கண்காணித்து குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்று தர அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply