மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை: கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். கடந்த 2003ம் ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் […]...மேலும்