தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்!

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் கண்டனக் கூட்டம் இன்று (24.05.2018), காலை 10 மணியளவில், செகா கலைக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பேராசிரியர் நா. இளங்கோ தலைமைத் தாங்கினார். நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் கோ. சுகுமாரன் தொடக்கவுரை ஆற்றினர்.

கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது திட்டமிட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 13 பேரைக் கொன்ற தமிழக காவல்துறையையும், அதற்கு மூலக் காரணமான தமிழக மற்றும் மத்திய அரசுகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2) துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

3) துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

4) தூத்துக்குடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ள துணை இராணுவத்தை உடனே திரும்பப் பெற்று, அப்பகுதியில் அமைதியான சூழல் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்திரமாக மூட வேண்டும்.

6) 13 உயிர்களைப் பலி வாங்கிய கொடுஞ்செயலுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.

கூட்டத்தில் கலந்துக் கொண்டோர்:

1. து. கீதநாதன், துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2. சோ. பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலர், சிபிஐ (எம்-எல்)

3. பு. சங்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

4. நா. தமிழ்மாறன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

5. எழுத்தாளர் செயப்பிரகாசம்

6. கோ.அ. ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

7. ஶ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

8. வீரமோகன், தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

9. ப. அப்துல்லாஹ், மாவட்ட தலைவர், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி

10. கோ. அழகர், செயலாளர், தமிழர் களம்

11. சீனு. அரிமாப்பாண்டியன், செயலாளர், தனித்தமிழ்க் கழகம்

12. தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்

13. சு. இராமச்சந்திரன், தலைவர், முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

14. கோ. சக்திவேல், அமைப்பாளர், ஐந்தாவது தூண் அமைப்பு

15. ஆ. பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை

16. ஆலடி. கணேசன், இளைஞரணித் தலைவர், ஆம் ஆத்மி கட்சி

17. சி.எம். புரட்சிவேந்தன், தலைவர், லோக் ஜனசக்தி

18. பொறிஞர் இரா. தேவதாசு, தலைவர் இராதே அறக்கட்டளை

19. பெ. பராங்குசம், தலைவர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்

20. லிகாயத் அலி, பொறுப்பாளர், அஞ்சுமன் நூலகம்

21. தெய்வீகன், தலைவர், வீரத்தமிழர் பேரவை

22. சிவ. இளங்கோ, தலைவர், அண்ணா பேரவை

23. கோ. தாமரைக்கோ, செம்படுகை நன்னீரகம்

24. துரை. மாலிறையன், தமிழர் தேசிய முன்னணி

25. இரா. சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

26. வி. மாறன், தலைவர், மக்கள் நற்பணி மன்றம்

27. மு. நாராயணசாமி, தலைவர், மக்கள் மன்றம்

28. கே. சங்கரலிங்கம், தலைவர், புதுவை அமரர் ராஜீவ்காந்தி நுகர்வோர் அமைப்பு

29. கே. சந்திரா, உழவர்கரை நகராட்சி நுகர்வோர் அமைப்பு

30. இள. கோவலன், புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை

31. பெண்ணியம் செல்வகுமாரி, மகிழ்ச்சி நலப் பெண்கள் பேரவை

32. ப. திருநாவுக்கரசு, நண்பர்கள் தோட்டம்

33. இரா. இளமுருகன், தலைவர், தமிழன்பர்கள் நற்பணி அறக்கட்டளை

34. அர. அரிகிருஷ்ணன், தலைவர், மக்கள் சக்திப் பாதுகாப்பு இயக்கம்

35. பிராங்குளின், தலைவர், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம்

36. சரஸ்வதி வைத்தியநாதன், படைப்பாளர் இயக்கம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.