மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :

அகில இந்திய அளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் மக்களின் குடி உரிமைக்  கழகம் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில மாநாடு கடந்த டிசம்பர் 20, 21 – ஆகிய தேதிகளில் கோவைவில் நடைபெற்றது.

மாநில மாநாட்டையொட்டி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவராக இர. அபிமன்னன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர், மக்கள் சிவில் உரிமைக் கழக புதுச்சேரி கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவர். முதல் முறையாக புதுச்சேரி அமைப்பைச் சேர்ந்தவருக்கு தமிழக அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தலைவராகவும், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் தங்க வேல்சாமி மற்றொரு துணைத் தலைவராகவும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் பொதுச்செயலாளராகவும், ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் இணைச் செயலாளராகவும், கல்பாக்கம் விஞ்ஞானி கலாவதி பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*