வீரப்பன் அண்ணன் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் – கூட்டறிக்கை!

வீரப்பன் சகோதரர் மாதையன் விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டறிக்கை!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பெறுநர்

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,
தமிழக முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்
சென்னை – 600 001.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் திரு. மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து திரு. ஆண்டியப்பன், திரு. பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர்.

இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.

சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழகத்தின் சிறைத்துறை அவ்வப்போது வெளியிடுகின்ற அரசாணைகள் சில குற்றங்களுக்குத் தண்டனைப் பெற்றவர்கள் மட்டும் முன் விடுதலைக்கு (Premature Release) தகுதியானவர்கள் என்றும், மற்ற சில குற்றங்களுக்காகத் தண்டனைப் பெற்றவர்கள் முன்விடுதலைப் பரிசீலனைக்கே தகுதியற்றவர்கள் என்றும் காட்டப்படுகிற பாகுபாடு, இது போன்ற நீண்ட சிறைவாசங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

இந்தச் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பான இத்தகைய பாகுபாடு என்பது, சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் மறுவாழ்வு பெறுகின்ற கண்ணோட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானதாக உள்ளது.

மேலும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது அவர் சிறையில் வாடும் காலத்தின் அடிப்படையில் முடிவு செய்வதற்குப் பதிலாக, அவர் தண்டனைப் பெற்றுள்ள வழக்குப் பிரிவுகளின் அடிப்படையில் முடிவு செய்வதென்பது மனிதநேயத்தையும், சிறைவாசியின் விடுதலை குறித்தான நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433ஏ, ஆயுள் தண்டனை என்பதைக் குறைந்த அளவு 14 ஆண்டுகள் என்றே வரையறுத்துள்ளது. தவிரவும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை, ஏற்கெனவே வழங்கியுள்ள சில தீர்ப்புகளில் சாதாரண ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை 10 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்கலாம் என்றும், முன்விடுதலையைப் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாத பிரிவுகளில் தண்டனைப் பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து 14 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும், வீரப்பனின் சகோதரர் திரு. மாதையன் சார்பாக முன் விடுதலை வேண்டி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 03.10.2017 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் திரு. மாதையன் அவர்களுடைய
முன் விடுதலைக் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு செய்திடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும். அவருடைய விடுதலை என்பது இன்னும் சாத்தியமாகவில்லை.

சிறைத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் முன் விடுதலைக் குறித்து வெளியிடுகின்ற அரசாணைகளில் சில குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனையானது. இதனால், குறிப்பிட்ட சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு என்பது தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வீரப்பனின் சகோதரர் திரு. மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து திரு. ஆண்டியப்பன், திரு. பெருமாள் ஆகியோர் சுமார் 75 வயதை நெருங்கிய முதியவர்களாக இருந்து வருகிற நிலையில், உடலாலும், மனதாலும் பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களில் இவர்களுடைய மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் இறந்து, குடும்பங்கள் நிர்க்கதியான அவலநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களின் எஞ்சிய ஒரு சில ஆண்டுகளையாவது மீதமுள்ள உறவுகளோடு கழித்திடப் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

முழுக்க மனித நேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இரக்க குணத்தின் அடிப்படையிலும், மன்னிக்கும் அரசமைப்பு அதிகாரத்தைக் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு சிறையில் வாடி வருகின்றனர்.

சிறைவாசிகள் தங்களது தண்டனையைக் கழிக்கின்ற ஒவ்வொரு நாளும், என்றாவது ஒருநாள் நாம் விடுதலை ஆவோம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் காலத்தைக் கடத்தி வருகின்றனர். அந்த நம்பிக்கை நிறைவேறாத சூழ்நிலையில், நீண்ட ஆயுள் சிறைவாசியின் மனநிலை என்பது பெருத்த பாதிப்புக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, இவர்களுக்கு விரைவில் விடுதலை வழங்கிட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

ஒருங்கிணைப்பு —

மக்கள் சிவில் உரிமைக் கழகம்
(PUCL)

மக்கள் கண்காணிப்பகம்
(People’s Watch)

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்.
சோகோ அறக்கட்டளை.

தோழமையுடன் கூட்டறிக்கையில் கையெழுத்திட இசைவு அளித்தோர் —

தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி

வேல் முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்

பேராசிரியர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி

நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சி

கொளத்தூர் மணி
திராவிடர் விடுதலைக் கழகம்

கு.இராமகிருஷ்ணன்
தந்தைபெரியார் திராவிடர்கழகம்

எஸ்.வி.ராஜதுரை
மார்க்சிய – பெரியாரிய ஆய்வாளர்

பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி

இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை

ப.பா.மோகன்
மூத்த வழக்கறிஞர்

தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

வீ. அரசு
ஆய்வாளர்

டிராட்ஸ்கி மருது
ஓவியக் கலைஞர்

தமிழ்ச்செல்வன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

இரா. பாரதிநாதன்
எழுத்தாளர்

சுதா ராமலிங்கம்
மூத்த வழக்கறிஞர்

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பொதுக் கல்விக்கான மாநில மேடை

கோவன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

நாகை திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி

வாலாசா வல்லவன்
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

சே. வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பேராசிரியர் செயராமன்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

கீற்று நந்தன்
ஊடகவியலாளர்

சுப.உதயகுமாரன்
பச்சைத் தமிழகம் கட்சி

ஆழி செந்தில்நாதன்
மொழி நிகர்மை உரிமைப்
பரப்புரை இயக்கம்

மீ.த.பாண்டியன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

பாலன்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

செந்தில்
இளந்தமிழகம்

சாவித்திரி கண்ணன்
ஊடகவியலாளர்

பொன்வண்ணன்
திரைக்கலைஞர்

கி.வே. பொன்னையன்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்

அஜிதா
மூத்த வழக்கறிஞர்

பாமரன்
எழுத்தாளர்

பாவேந்தன்
தமிழ்த் தேச நடுவம்

கயல் அங்கயற்கண்ணி
தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்

அமரந்த்தா
எழுத்தாளர்

மாலதி மைத்திரி
அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

சுகிர்தராணி
கவிஞர்

பாத்திமா பாபு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

ஜீவசுந்தரி
எழுத்தாளர்

தமயந்தி
புரட்சிகர விடியல் பெண்கள்
மையம்

செல்வி
மனிதி மகளிர் இயக்கம்

சிவகாமி
தமிழ்நாடு அறிவியல் மன்றம்

இராசேந்திர சோழன்
எழுத்தாளர்

புனித பாண்டியன்
தலித் முரசு

நிலவழகன்
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

ஆர்.ஆர்.சீனிவாசன்
ஆவணப்பட இயக்குநர்

முத்தமிழ்
புரட்சிக்கவிஞர் கலைஇலக்கிய மன்றம்

ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர்

கோ.சுகுமாரன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

பிரபா கல்விமணி
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்

கே.சாமுவேல்ராஜ்
தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி

தாஜுதீன்
சுயாட்சி இந்தியா

சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர்

செந்தமிழ்வாணன்
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்

பவா செல்லதுரை
எழுத்தாளர்

மருதுபாண்டியன்
சோசலிச மையம்

பிரிட்டோ
சமூகச் செயல்பாட்டாளர்

புலியூர் முருகேசன்
எழுத்தாளர்

பேராசிரியர் சங்கரலிங்கம்
சுயாட்சி இயக்கம்

பேராசிரியர் விஜயகுமார்
இந்திய சமூக அறிவியல் கழகம்

தமிழ் இராசேந்திரன்
கரூர் மக்கள் மன்றம்

துரைப்பாண்டி
தமிழ்க்கணியாளர்

கு.ஞா. பகவத்சிங்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – போராட்டக்குழு

அழகேசன்
இந்தியக் கலப்புத் திருமணம் செய்தோர் சங்கம்

தேவநேயன் , குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்

திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்

நிலவன்
நீரோடை இயக்கம்

ஜமாலன்
எழுத்தாளர்

ஒப்புரவாளன்
தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்

நிழல்வண்ணன்
எழுத்தாளர்

காஞ்சி அமுதன்
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

அரசெழிலன்
இதழியலாளர்

தமிழரசன்
தமிழகத் தொழிலாளர் முன்னணி

வழக்கறிஞர் செ.குணசேகரன்
அம்பேத்கர் – பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கம்.

கோபி நயினார்
திரைப்பட இயக்குநர்

மீரான் மைதீன்
எழுத்தாளர்

பாரதி கிருஷ்ணகுமார்
எழுத்தாளர்

வசந்தபாலன்
திரைப்பட இயக்குநர்

சோழன் மு. களஞ்சியம்
தமிழர் நலப்பேரியக்கம்

பியூஷ் மனுஷ்
சூழலியலாளர்

அனீஸ்
திரைப்பட இயக்குநர்

பேராசிரியர் பா.ச. அரிபாபு
தமிழ் உயராய்வு மையம்

அரிமா வளவன்
தமிழர் களம்.

ஆர். செவ்விளம்பருதி
அனைத்திந்திய வழக்குரைஞர் கவுன்சில்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*