ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி “மகளிர் தின விழா”

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா பாரதி பூங்கா எதிரில் உள்ள வணிக அவையில் 8.3.2010 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் 7 ஆண்டுகள் சிறை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

சமூக ஆர்வலரும், கவிஞருமான மாலதி மைத்ரி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், இளைஞர் நிறுவன பொறுப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.

முடிவில் கோவை சிறையில் இருக்கும் முஸ்லீம் கைதிகளின் குடும்பத்தினர் படும் துன்பங்களை விளக்கும் “நீதியைத் தேடி” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

சிறையில் உள்ள ஆயுள் கைதிகளின் குடும்பத்தினர் திரளாக கலந்துக் கொண்டனர். சிறைக் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க தங்கள் துயரங்களை வெளிப்படுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*