சென்டாக் கல்வி உதவித்தொகை மோசடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2013) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் நடந்த சென்டாக்கல்வி உதவித்தொகை மோசடி குறித்து உடனே வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் புதுச்சேரிஅரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் சென்டாக் மூலம்தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் மிகப்பெரும்மோசடி நடந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைபோலியான ஆவணம் தயாரித்து மாணவர் அல்லாத வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறை அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும்கூட்டாக இதில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவம், பொறியியல் பயிலும் சுமார் 68 மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்வி உதவித்தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்த மோசடியை மூடிமறைக்க நிதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களைகல்லூரி நிர்வாகங்கள் மிரட்டுவதாகவும் செய்தி வந்துள்ளது.

புதுச்சேரி அரசு உடனடியாக  சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல்வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனே வெள்ளை அறிக்கை ஒன்றைவெளியிட வேண்டும்.

இந்த விசாரணை நேர்மையாகும்,உண்மையாகவும் நடைபெற இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர்கல்வித்துறை அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*