எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.12.2018) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு:

என் நெருங்கிய நண்பரும், சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சன் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தன் எழுத்துக்களால் தமிழுக்கு அளப்பரிய பங்காற்றியவர். எழுத்துப் பணியோடு சமூகப் பணிகளிலும் ஈடுப்பட்டவர்.

அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்தும், மண்ணின் மைந்தருமான எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published.


*