மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜன்நாயக இயக்கங்கள் சார்பில் இன்று (03.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரின் தந்தையார் சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முன்னிலையிலேயே அவரது உறவினர்கள் செவிலியர், ஊழியர்களைத் தாக்கினர்.

காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர், காவல் ஆய்வாளர், அவரது உறவினர்கள் மீது பெரியக்கடை காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவல் ஆய்வாளரை கைது செய்ய கோரி புதுச்சேரி முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை இழுத்து மூடியுள்ளனர்.

இதனால், நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மருந்து, மாத்திரைகள்கூட வழங்கப்படாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து எந்தக் கவலையும்படாமல், பிரச்சனைக்குத் தீர்வுக் காணாமல் புதுச்சேரி அரசு மெத்தனமாக உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

நோயாளிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள், சுகாதார ஊழியர்கள் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் நிலை உள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு இனியும் தாமதிக்காமல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல், அரசுக்கு எதிராக சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கின்றோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*