தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவு: சமூக அமைப்புகள் மலரஞ்சலி!

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவையொட்டி இன்று (20.09.2020) மாலை 4.30 மணியளவில் காமராசர் சிலை அருகில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். புதுவைச் சிவம் இலக்கிய பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், முதல்வரின் பாராளுமன்ற செயலர் க.லட்சுமி நாராயணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. இரா.இராஜாங்கம், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், பேராசிரியர் நா.இளங்கோ, இந்திய ஜனநாயக கட்சி செயலாளர் சத்தியவேல், வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் தி.கோவிந்தராசு, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் இரமேஷ், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் வேல்சாமி, கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகப் பொறுப்பாளர் லியாகத் அலி, சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின், திரைப்பட ஒளிப்பதிவாளர் அருண் மொழித்தேவன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், சமூக இயக்கத்தினர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பெ.பராங்குசம் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*