பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது!

புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (12.02.2021) காலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போலீஸ் தடுப்புகளை மீறி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

பழங்குடியினர் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் மா. ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். புதுவை மாநில பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே. இராம்குமார் தொடக்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்:

அ.மு. சலீம், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

கோ. இராமசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

முகமது யூனிஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், திமுக.

அ. அகமது சாலிஹ், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர், எஸ்.டி.பி.ஐ.

சி. ஶ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

ப. இஸ்மாயில், மாநில இளைஞரணி பொறுப்பாளர், அகில இந்திய மஜிலிஸ் கட்சி.

கோ.அ. ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,

சிவ. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

லோகு. அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

வீரமோகன், தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
கோ. அழகர், செயலாளர், தமிழர் களம்.

ஆ. பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

பி.பிரகாஷ், தலைவர், புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

இர. அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.

அர. அரிகிருஷ்ணன், தலைவர், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம்.

இரா. இராஜா, தலைவர், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்.

வி. மாறன், தலைவர், மக்கள் நற்பணி இயக்கம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*